PDF chapter test TRY NOW

ஓரெழுத்து ஒருமொழி என்பது ஓர் எழுத்து, ஒரு சொல்லாகநின்று பொருள் தருவது ஆகும்.
 
பூ, கை, வா, போ, தை ஆகிய எழுத்துகளைக் கவனிக்கவும்.
 
இவ்வெழுத்துகள் ஒவ்வொன்றும் ஒரு பொருள் தருவதை உணர்வீர்கள்.
 
நன்னூல் இலக்கண நூலில்நாற்பத்து இரண்டு  ஓரெழுத்து ஒரு மொழி எழுத்துகள் உள்ளதாகப் பவணந்தி முனிவர் கூறுகிறார்.
 
இவற்றில், நெடில் எழுத்துகள் – நாற்பது (40).
 
குறில் எழுத்துகள் – இரண்டு (2).
 
இந்நாற்பத்து இரண்டு  ஓரெழுத்து ஒருமொழிகளை அறிவதன் மூலம் அவ்வெழுத்துகளின் பொருள்களை அறிந்து பயன்படுத்த முடியும்.
 
மேலும், இவ்வெழுத்துகளிலிருந்து பிறக்கும் புதிய சொற்களையும்,  பொருளிலிருந்து வளரும் சொற்களையும் சொற்றொடர்களையும் அறிய முடியும்.
 
பெரும்பான்மையான தமிழ்ச்சொற்கள் உருவாவதை உணர்ந்து, அச்சொற்களை எளிமையாகக் கற்கும் வாய்ப்பிற்கு அடிப்படையாக அமைகின்றன ஓரெழுத்து ஒருமொழிகள்.
 
அதேசமயத்தில், ஒரு சொல்லுக்கும் ஒரு பொருளுக்குமான அடிச்சொல்லைக் காண உதவியாய் நிற்கின்றன.
 
இந்நாற்பத்து இரண்டு  ஓரெழுத்து ஒரு மொழிகளை எளிமையாக நினைவில் இருத்திக் கொள்ளும் வகையில் அட்டவணையாகக் காண்போம்.
 
13_colour.svg
 
உயிர் எழுத்துகள் - 12.
 
 
உயிர் எழுத்துகள் இருவகைப்படும்.
 
குறில் - 5
 
  
நெடில் - 7
 
 
உயிர் நெடில் ஏழு எழுத்துகளில் நீங்கி ஏனைய, ஆறு எழுத்துகள் ஓரெழுத்து ஒரு மொழிகளாகப்பொருள் தருகின்றன.