PDF chapter test TRY NOW
அன்மொழித்தொகை
பொற்றொடி வந்தாள். (தொடி-வளையல்)
இத்தொடரில் பொற்றொடி என்பது பொன்னாலான வளையல் எனப் பொருள் தரும்.
இத்தொடர் வந்தாள் என்னும் வினைச்சொல்லைத் தழுவி நிற்பதால் பொன்னாலாகிய வளையலை அணிந்த பெண் வந்தாள் என்னும் பொருள் தருகிறது.
இதில் 'ஆல்' என்னும் மூன்றாம் வேற்றுமை உருபும் 'ஆகிய' என்னும் அதன் பயனும் மறைந்து வந்து, வந்தாள் என்னும் சொல்லால் பெண் என்பதையும் குறிப்பதால் இது மூன்றாம் வேற்றுமைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை எனப்படும்.
இவ்வாறு வேற்றுமை, வினை, பண்பு, உவமை, உம்மை ஆகிய தொகைநிலைத் தொடர்களுள், அவை அல்லாத வேறு பிற சொற்களும் மறைந்து வருவது அன்மொழித்தொகை (அல் + மொழி + தொகை) எனப்படும்.
தெரிந்து தெளிவோம்
ஒன்றுக்கு மேற்பட்ட சொற்களில் உம் என்னும் உருபு வெளிப்பட வருவது எண்ணும்மை எனப்படும்.
(எ.கா.) இரவும் பகலும், பசுவும் கன்றும்