PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
பண்புத்தொகை
நிறம், வடிவம், சுவை, அளவு முதலானவற்றை உணர்த்தும் பண்புப் பெயருக்கும் அது தழுவி நிற்கும் பெயர்ச் சொல்லுக்கும் இடையில் “மை” என்னும் பண்பு விகுதியும் ஆகிய, ஆன என்னும் பண்பு உருபுகளும் மறைந்து வருவது பண்புத் தொகை எனப்படும்.
 
செங்காந்தள்     –  செம்மையாகிய காந்தள்
வட்டத் தொட்டி      –  வட்டமான தொட்டி
இன்மொழி        –  இனிமையான மொழி
  
இருபெயரொட்டுப் பண்புத்தொகை
சிறப்புப்பெயர் முன்னும்  பொதுப் பெயர் பின்னும் நின்று இடையில் ஆகிய  என்னும் பண்பு உருபு தொக்கி வருவது இரு பெயரொட்டுப் பண்புத் தொகையாகும்.
 
எ.கா.
  
மார்கழித் திங்கள்
  
சாரைப்பாம்பு.
 
திங்கள், பாம்பு ஆகிய பொதுப்பெயர்களுக்குமுன் மார்கழி, சாரை எனும் சிறப்புப் பெயர்கள் வந்து மார்கழி ஆகிய திங்கள் என்றும் சாரை ஆகிய பாம்பு என்றும் இருபெயரொட்டாக வந்துள்ளன.
உவமைத் தொகை
உவமைக்கும் பொருளுக்கும் (உவமேயம்) இடையில் உவமஉருபு மறைந்து வருவது உவமைத் தொகை எனப்படும்.
 
எ.கா.
  
மலர்க்கை (மலர் போன்ற கை )
 
மலர் – உவமை
 
கை – உவமேயம் (பொருள்) இடையே போன்ற என்னும் உவம உருபு மறைந்து வந்துள்ளது.
உம்மைத் தொகை
இரு சொற்களுக்கு இடையிலும் இறுதியிலும் உம் என்னும் இடைச்சொல் மறைந்து வருவது உம்மைத் தொகையாகும். உம்மைத் தொகை எண்ணல், எடுத்தல், முகத்தல், நீட்டல் என்னும் நான்கு அளவுப் பெயர்களைத் தொடர்ந்து வரும்.
  
எ.கா.
  
அண்ணன் தம்பி
  
தாய்சேய்
  
அண்ணனும் தம்பியும்
  
தாயும் சேயும் என விரிந்து பொருளை உணர்த்துகின்றன.
அன்மொழித் தொகை
வேற்றுமை, வினை, பண்பு, உவமை , உம்மை ஆகிய தொகை நிலைத் தொடர்கள் அவை அல்லாத வேறு சொற்கள் மறைந்து நின்று பொருள் தருவது அன்மொழித் தொகை ஆகும்.
  
எ.கா.
  
சிவப்புச் சட்டை பேசினார்
  
முறுக்கு மீசை வந்தார்
 
இவற்றில் சிவப்புச் சட்டை அணிந்தவர் பேசினார், முறுக்கு மீசையை உடையவர் வந்தார் எனத் தொகை நிலைத் தொடர் அல்லாத வேறு சொற்கள் மறைந்து நின்று பொருள் தருகின்றன .