PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
இறைவன் மனிதனுக்குச் சொன்னது கீதை.
மனிதன் இறைவனுக்குச் சொன்னது திருவாசகம்.
மனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள்.
 
வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து
வான்புகழ் தந்த தமிழ்நாடு – பாரதியார்.
 
வள்ளுவனைப் பெற்றதால்
பெற்றதே புகழ் வையகமே – பாரதிதாசன்.
  • பெயர்   –   திருவள்ளுவர்.
  • சிறப்புப் பெயர்கள்   –   முதற்பாவலர், தெய்வப் புலவர், நாயனார், பெருநாவலர், பொய்யில் புலவர், செந்நாப் போதார்.
  • காலம்   –   இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முட்பட்டவர்.
  • நூல்  –  திருக்குறள்
  • நூலின் வேறு பெயர்கள்  –  முப்பால், தெய்வநூல், பொய்யாமொழி.
    நூலின் சிறப்புப் பெயர்  – உலகப் பொதுமறை.
    திருக்குறள் நூல் பற்றி  –  முப்பால் என்னும் மூன்று பகுப்புக் கொண்டது.
    1. அறத்துப்பால்: 38.
    2. பொருட்பால்: 70.
    3. இன்பத்துப்பால்: 25.
    மொத்தம்: 133 அதிகாரங்கள் உள்ளன.
  • அதிகாரத்திற்குப் பத்து குறட்பாக்கள் வீதம் மொத்தம் 1330 குறட்பாக்கள் உள்ளன.
  • திருக்குறள் உலகின் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
    ஆங்கில மொழியில் ஜி.யூ.போப் என்பவர் மொழிபெயர்த்துள்ளார்.
திருக்குறள் - நூற்குறிப்பு
 
திருக்குறள் மூன்று (3) பிரிவுகளைக் கொண்டுள்ளது.
ஓர் அதிகாரத்திற்குப் பத்து (10) குறட்பாக்கள் வீதம் மொத்தம் ஆயிரத்து முன்னூற்று முப்பது (1330) குறட்பாக்கள் உள்ளன.
 
முப்பால் - 3அதிகாரங்கள்133குறட்பாஎண்ணிக்கை1330
1.அறத்துப்பால் - 38
   I. பாயிரம்
   II. இல்லறவியல்
   III. துறவறவியல்
   IV. ஊழ் இயல்
04        
20
13
01      - 38
380
2.பொருட்பால் - 70
   I. அரசியல்
   II. அங்க இயல்
   III. ஒழிபு இயல்
25
32
13      - 70
700
3.இன்பத்துப்பால் - 25
   I. களவியல்
   II. கற்பு இயல்பு
07
18      - 25
250
மொத்தம்1331330
 
அறத்துப்பாலில் பாயிரம் 4 அதிகாரங்கள் நீங்கலாக,
அறத்துப்பால்-33-இதன் கூட்டுத்தொகை - 7
பொருட்பால்-70-இதன் கூட்டுத்தொகை - 7
இன்பத்துப்பால்  -25-இதன் கூட்டுத்தொகை - 7
அதிகாரங்கள்-133-இதன் கூட்டுத்தொகை - 7
குறட்பாக்கள் -1330  -இதன் கூட்டுத்தொகை - 7
 
7 என்ற எண்ணை நினைவில் இருத்திக் கொண்டு, திருக்குறளை முப்பாலின் அடிப்படையில் அமைந்துள்ள அதிகாரங்களை எளிதில் கூறிவிடலாம்.