PDF chapter test TRY NOW

முதனிலைத் தொழிற்பெயர்
 
வானில் இடி இடித்தது
  
சோறு கொதி வந்தது
 
இடி, கொதி என்னும் சொற்கள் இடித்தல், கொதித்தல் என்னும் சொற்களின் பகுதிகளாகும். இவ்வாறு ஏவல் ஒருமை வினையாக அமையும் வினைச்சொற்களின் பகுதியை முதனிலை என்பர்.
 
முதனிலை எவ்வகை மாற்றமும் பெறாமல் தொழிற்பெயராக அமைவது முதனிலைத் தொழிற்பெயர் எனப்படும்.
 
(எ.கா.)
 
செல்லமாக ஓர் அடி அடித்தான்
 
அறிஞர் அண்ணா தம் பேச்சால் புகழ் பெற்றார்.
 
இயற்றில் அடிக்கோடிட்ட சொற்கள் விகுதிபெறாமல் தம்பொருளை உணர்த்துகின்றன.
 
முதனிலை திரிந்த தொழிற்பெயர்
 
தமிழ் படிக்கும் பேறு பெற்றேன். 
  
உணவின் சூடு குறையவில்லை.
 
இத்தொடர்களில் பேறு, சூடு ஆகிய சொற்களைக் கவனியுங்கள்.
 
பெறு, சுடு என்னும் பகுதிகளின் முதலெழுத்து நீண்டு, பேறு, சூடு எனத் திரிந்து தொழிற்பெயர்களாக மாறி உள்ளன.
 
இவ்வாறு, முதல் நிலை திரிவதால் உருவாகும் தொழிற்பெயர் முதனிலைதிரிந்த தொழிற்பெயர் எனப்படும்.
 
(எ.கா.) விடு - வீடு, மின் - மீன், கொள் - கோள், உடன்படு - உடன்பாடு