PDF chapter test TRY NOW
இருதிணை
ஆறறிவுடைய மக்களை உயர்திணை என்றும் மற்ற உயிரினங்களையும் உயிரற்ற பொருள்களையும் அஃறிணை(அல்திணை) என்றும் வழங்குவர்.
ஐம்பால்
பால் என்பது திணையின் உட்பிரிவு ஆகும் (பால் – பகுப்பு, பிரிவு).
இஃது ஐந்து வகைப்படும்.
உயர் திணை
1. ஆண்பால்
2. பெண்பால்
3. பலர்பால்
என மூன்று பிரிவுகளை உடையது.
அஃறிணை
1. ஒன்றன் பால்
2. பலவின் பால்
என இரு பிரிவுகளை உடையது.
உயர்திணைக்குரிய பால் பகுப்புகள்
வீரன், அண்ணன், மருதன் | – ஆண்பால் |
மகள், அரசி, தலைவி | – பெண்பால் மக்கள் |
பெண்கள், ஆடவர் | – பலர்பால் |
அஃறிணைக்குரிய பால் பகுப்புகள்
அஃறிணையில் ஒன்றனைக் குறிப்பது ஒன்றன்பால் ஆகும்.
யானை
புறா
மலை
கடல்
காற்று
அஃறிணையில் பலவற்றைக் குறிப்பது பலவின்பால் ஆகும்.
பசுக்கள்
மலைகள்
யானைகள்
மாடுகள்
ஆடுகள்
வீடுகள்
கடல்கள் .