PDF chapter test TRY NOW

தமிழாசிரியர் : முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் ஆகியன ஐந்திணைகளுக்கு உரியன.
 
மாணவி 1: முதற்பொருள் என்பது எதைக் குறிக்கிறது அம்மா? '
 
தமிழாசிரியர் : நிலமும் பொழுதும் முதற்பொருள் எனப்படும்.
 
மாணவி 2: நிலம் என்பது வயல்தானே?
 
தமிழாசிரியர் : பொறு. பொறு.. நிலம் ஐந்து வகைப்படும்.
 
ஐவகை நிலங்கள்
குறிஞ்சி மலையும் மலைசார்ந்த இடமும்
முல்லை காடும் காடு சார்ந்த இடமும்
மருதம் வயலும் வயல் சார்ந்த இடமும்
நெய்தல் கடலும் கடல்சார்ந்த இடமும்
பாலை சுரமும் சுரம் சார்ந்த இடமும்
 
மாணவி 1 : சரி அம்மா. பொழுது என்பது...?
 
தமிழாசிரியர்: பொழுது, பெரும்பொழுது, சிறுபொழுது என இருவகைப்படும்..
 
மாணவி 2: பெரும்பொழுது, சிறுபொழுது பற்றிக் கூறுங்கள்.
 
தமிழாசிரியர் : ஓராண்டின் ஆறு கூறுகளைப் பெரும்பொழுது என்று நம் முன்னோர் பிரித்துள்ளனர்.