PDF chapter test TRY NOW

சேரலாதன் : எப்படி முறையாகப் போர் புரிந்திருக்கிறார்கள். தமிழனின் மாண்பே மாண்பு.
 
கிள்ளிவளவன் : பாடுவதற்குத் தகுதியுடைய ஓர் ஆளுமையாளரின் கல்வி, வீரம், செல்வம், புகழ் கருணை முதலியவற்றைப் போற்றிப் பாடுவது. பாடாண் திணை (பாடு+ஆண்+திணை பாடாண் திணை).
 
சேரலாதன் : ஆமாம். போரை மட்டும் சொல்லாது பிற மாண்புகளையும் பாடுகிறது இத்திணை அருமை! அருமை!
 
கிள்ளிவளவன் : அடுத்து... வெட்சி முதல் பாடாண் வரை உள்ள புறத்திணைகளில் பொதுவானவற்றையும், அவற்றுள் கூறப்படாதவைற்றையும் கூறுவது. பொதுவியல் திணை
 
சேரலாதன் : கேட்கக் கேட்க இனிமை பயக்கிறது.
 
கிள்ளிவளவன் : கைக்கிளை என்பது ஒருதலைக் காமம்
 
சேரலாதன் : அடுத்தது என்ன?
 
கிள்ளிவளவன் : பெருந்திணை. இது பொருந்தாக் காமத்தைக் குறிக்கிறது
 
சேரலாதன் : அட்டா எப்படியெல்லாம். திணைகளை வகுத்திருக்கிறார்கள் மகிழ்ச்சி அண்ணே நன்று அண்ணே!
 
கிள்ளிவளவன் : மகிழ்ச்சி தம்பி...