PDF chapter test TRY NOW

சேரலாதன் : வெட்சியென்றால் என்ன? 
 
கிள்ளிவளவன் : மக்கள் சிறு குழுக்களாக வாழ்ந்த காலத்தில், ஆதிரைகளைச் (மாடுகளை) சொத்தாகக் கருதினர். ஒரு குழுவினரிடமிருந்து மற்றொரு குழுவினர் ஆநிரைகளைக் கவர்தல் வழக்கமாக இருந்தது. ஆநிரைகளைக் கவர்ந்து வர வெட்சிப் பூவினைச் சூடிக்கொண்டு செல்வர். எனவே, ஆநிரை கவர்தல் வெட்சித் திணை எனப்பட்டது.
 
சேரலாதன் : அழகு. அடுத்த திணை என்ன?
 
கிள்ளிவளவன் : கரத்தைத் திணை. கவர்ந்து செல்லப்பட்ட தம் ஆநிரைகளை மீட்கச்செல்வர். அப்போது கரந்தைப் பூவைச் சூடிக்கொள்வர். அதனால் கரந்தைத் திணை என்று பெயர் பெற்றது.
 
சேரலாதன் : அடுத்ததாக...