PDF chapter test TRY NOW
தொடை
தொடை - தொடுத்தல்.
பாடலின் அடிகளிலோ, சீர்களிலோ எழுத்துகள் ஒன்றிவரத் தொடுப்பது ’தொடை’ ஆகும்.
தொடை என்னும் செய்யுள் உறுப்பு , பாடலில் உள்ள அடிகள்தோறும் அல்லது சீர்கள்தோறும் ஒரு குறிப்பிட்ட வகையிலான ஓசை பொருந்தி வருமாறு பாடலை இயற்றுதல் பற்றி அமைகிறது.
மோனை
எதுகை
இயைபு
அளபெடை
முரண்
இரட்டை
அந்தாதி
செந்தொடை
என்று எட்டு வகைகளாகத் தொடை அமைகிறது.
மோனைத் தொடை:
ஒரு பாடலில் அடிகளிலோ, சீர்களிலோ முதலெழுத்து ஒன்றி அமைவது.
(எ.கா.)
ஒற்றொற்றித் தந்த பொருளையும் மற்றுமோர்
ஒற்றினால் ஒற்றிக் கொளல்.
எதுகைத் தொடை :
அடிகளிலோ , சீர்களிலோ முதல் எழுத்து அளவொத்து நிற்க, இரண்டாம் எழுத்து ஒன்றியமைவது.
(எ.கா.)
திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து
அறனல்ல செய்யாமை நன்று.
இயைபுத் தொடை :
அடிகள்தோறும் இறுதி எழுத்தோ, அசையோ, சீரோ, அடியோ ஒன்றியமைவது.
(எ.கா.)
வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும் மந்திசிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சு.