PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoதமிழுக்கு மணமென்று போ்! - இன்பத்
தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊா்!
தமிழ் எங்கள் இளமைக்குப் பால்! - இன்பத்
தமிழ் நல்ல புகழ்மிக்க புலவா்க்கு வேல்!
தமிழுக்கு மணமென்று போ்!
தமிழுக்கு மணம் என்று பெயா். மலாின் மணமானது காற்று வீசும் இடங்களில் எல்லாம் கலந்து அந்த மலாின் சிறப்பை உணா்த்தும். என்னவொரு அருமையான மணம் என்று நம்மை சுவாசிக்க தூண்டும். அதைப் போலவே, நம் தமிழ் மொழியானது பேசும் இடங்களில் எல்லாம் தமிழ் மொழி பரவி தன்னுடைய சிறப்பை கேட்பவா்களுக்கு உணா்த்துகிறது. மிகவும் அருமையான மொழி என்று கேட்பவா்களைக் கூட வாசிக்கத் தூண்டுகிறது தமிழ் மொழி. நல்ல மணமானது நம்மை சுவாசிக்கத் தூண்டுகிறது. நல்ல மொழியானது நம்மை வாசிக்க தூண்டுகிறது. அதனால் தான், தமிழை மணத்தோடு ஒப்பிடுகிறாா் நம் கவிஞா்.
தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊா்!
தமிழ் எங்கள் வாழ்விற்காகவே உருவாக்கப்பட்ட ஊர் ஆகும். மக்கள் அனைவரும் சோ்ந்து வாழ்வதற்காகவும், ஒருவரை ஒருவா் தொிந்து கொள்வதற்காகவும் உருவாக்கப்பட்டதே ஊா் ஆகும். அதே போலத் தான், மக்கள் பேசுவதற்காகவும், அவரவா் எண்ணங்களை பாிமாறிக் கொள்வதற்காகவும் உருவாக்கப்பட்ட மொழியே நம் தமிழ்மொழி. அதனாலேயே, தமிழை ஊரோடு ஒப்பிடுகிறாா் பாரதிதாசன்.
தமிழ் எங்கள் இளமைக்குப் பால்.
தமிழ் இளமைக்கு காரணமான பால் போன்றது. பால் குடிப்பதால் உடலை இளமையாகவும், மனதை புத்துணா்ச்சியுடனும் வைத்திருக்க உதவுகிறது. அதே போல, நம் தமிழ் மொழியைப் படிப்பதால் மனதினை இளமையாகவும், புத்துணா்ச்சியோடும் வைத்திருக்க உதவுகிறது. அதனால், தமிழ் மொழியை பாலோடு ஒப்பிட்டுக் கூறியுள்ளாா் பாரதிதாசன் அவா்கள்.
தமிழ் நல்ல புகழ்மிக்க புலவா்க்கு வேல்!
நல்ல புகழ் மிகுந்த புலவா்களுக்குக் கூா்மையான வேல் போன்ற கருவியாகும். ஒரு மனிதன் கையில் வேல் வைத்திருந்தால் எந்த அச்சமும் கொள்ளத் தேவையில்லை. கூா்மையான வேலானது உடலில் ஊடுருவி பாய்ந்து செல்லும். அதே போலத் தான் தமிழ்ப்புலம் மிக்க புலவா்கள் எந்த சபையிலும் அச்சம் கொள்ளமாட்டாா்கள். புலவா்கள் இயற்றிய நூலில் உள்ள தமிழ்ச் சொற்களானது அதைப் படிப்பவா்கள் மனதினில் ஊடுருவி பாய்ந்து செல்லும். கூா்மையான வேல் உடலினை ஊடுருவி செல்வதைப் போலவே, கூா்மையான தமிழ்ச் சொற்களானது படிப்பவா்கள் மனதினை ஊடுருவி பாய்ந்து செல்கிறது. எனவே தான், தமிழை வேலோடு ஒப்பிடுகிறாா் கவிஞா்.
Reference:
மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் திருத்திய பதிப்பு (2020). ஆறாம் வகுப்பு முதல் பருவம். மொழி - தமிழ்தேன் (ப.எண். 1-4)தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தால் வெளியிடப்பட்டது.