PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoஇப்பாடல் வாிகளுக்குச் சொந்தக்காரர் பாவேந்தா் பாரதிதாசன். இவரைப் பற்றிக் காண்போம்.
பாரதிதாசன்
- ‘புரட்சிக்கவி’ எனவும் ‘பாவேந்தா்’ எனவும் அன்போடு அழைக்கப்பட்டாா்.
- தமிழில் இலக்கணம், இலக்கியம் மற்றும் சைவ சித்தாந்த வேதாந்தங்களை முறையாகக் கற்றுத் தமிழுக்கு மிகப்பெரும் தொண்டாற்றியவா்.
- மேலும், கவிஞா், எழுத்தாளா், அரசியல்வாதி, தமிழாசிாியா், திரைக்கதை ஆசிாியா் எனப் பல துறைகளில் தமிழின் பெருமையை மக்களிடம் எடுத்துச் சென்றவா்.
பிறப்பு | ஏப்ரல் 29, 1891 |
பிறப்பிடம் | புதுவை |
இறப்பு | ஏப்ரல் 21, 1964 |
பணிகள் | தமிழாசிரியர், கவிஞர், அரசியல்வாதி |
- தந்தை: கனகசபை முதலியாா்
- தாயாா்: இலக்குமி அம்மாள்
- இயற்பெயா் சுப்புரத்தினம்.
- இவா், தன் தந்தையின் பெயாில் உள்ள முன்பாதியை, தன் பெயரோடு இணைத்துக் ‘கனக சுப்புரத்தினம்’ என்று மாற்றிக்கொண்டாா்.
பாரதியார் மீது பற்று:
- தமிழ்மொழி மீதும் மகாகவி சுப்ரமணிய பாரதியார் மீதும் அதீதப் பற்றுக் கொண்டிருந்தார்.
- பாரதியாா் பாடலை அவா் தனது நண்பா் திருமணத்தில் பாடியுள்ளார்.
- அப்போதுதான், அவா் பாரதியாரை நோில் சந்திக்கும் வாய்ப்பும் கிடைத்தது.
- பாரதியாாிடமிருந்து மிகுந்த பாராட்டுகளையும் பெற்றாா். அவருடன் மிகவும் நட்பு பாராட்டினாா்.
- அன்று முதல் தனது இயற்பெயரான கனக சுப்புரத்தினத்தை ‘பாரதிதாசன்’ என மாற்றிக் கொண்டாா்.
- தாசன் என்பது அடிமை என்னும் பொருள்.
- பாரதிக்கு அடிமை என்னும் பொருளில் பாரதிதாசன் ஆனார்.
விருதுகள்:
- 1946ல் அமைதி-ஊமை என்ற நாடகத்திற்கு தங்ககிளி பரிசளிக்கப்பட்டது.
- 1970இல் இவரின் பிசிராந்தையார் என்ற நாடக நூலிற்காக சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பட்டது.
- 1962 ஆம் ஆண்டு தமிழ் எழுத்தாளர் சங்கம் நடத்திய பாராட்டு விழாவில் ராஜாஜி அவர்கள் கவிஞருக்குப் பொன்னாடை போர்த்தி கேடயம் வழங்கிப் பாராட்டினார்.
- 1968ல் உலக தமிழாராய்ச்சி மாநாட்டில் சென்னைக் கடற்கரையில் பாவேந்தர் உருவச் சிலை நாட்டப் பெற்றது.
- 1978 திருச்சியில் பாரதிதாசன் பல்கலைக் கழகம் உருவானது.
- 1990ல் பாவேந்தர் நூற்றாண்டு விழா ஆகத்து 26, 27 இல் தமிழக அரசால் கொண்டாடப்பட்டது.
- 2001ம் ஆண்டில் மத்திய அரசு பாவேந்தர் திருவுருவப் படத்தை உடைய அஞ்சல் தலை வெளியிட்டுச் சிறப்பித்துள்ளது.
- 2005ல் புதுச்சேரி அரசால் பாவேந்தர் பற்றிய ஆவணப்படம் தமிழ், ஆங்கிலம், ஃபிரெஞ்சு மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது.
படைப்புகள்:
- பெண்கல்வி
- கைம்பெண்
- மறுமணம்
- பொதுவுடைமை
- பகுத்தறிவு
- பாண்டியன் பரிசு
- எதிர்பாராத முத்தம்
- குறிஞ்சித்திட்டு
- குடும்ப விளக்கு
- இருண்ட வீடு
- அழகின் சிரிப்பு