PDF chapter test TRY NOW
இன்றைய அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப தமிழில் புதிய புதிய கலைச்சொற்கள் உருவாகி வருகின்றன.
இணையம், முகநூல், புலனம், குரல்தேடல், தேடுபொறி, செயலி, தொடுதிரை முதலிய சொற்களை இதற்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம். சமூக ஊடகங்களான செய்தித்தாள், வானொலி, தொலைக்காட்சி ஆகியவற்றிலும் பயன்படத்தக்க மொழியாக விளங்குகிறது தமிழ்மொழி.
- ஒரு மொழியில் உள்ள கருத்துக்களை பிற மொழியில் பெயா்த்து எழுதுவது மொழிபெயா்ப்பு எனப்படும்.
- அம்மொழி பெயா்ப்பினுடைய நாடித்துடிப்பு கலைச் சொற்கள் ஆகும்.
- ஒரு மொழியில் உள்ள சொல்லுக்கு ஏற்ற ஆழத்தையும், கருத்தையும் கொண்ட எளிமையான சொல்லை கலைச்சொல் என்போம்.
- இன்றைய அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப தமிழில் புதிய புதிய கலைச்சொற்கள் உருவாகி வருகின்றன.
- அவற்றில் சிலவற்றைக் காண்போம்.
1. QR Code | - | விரைவுக்குறி |
2. 3D | - | முத்திரட்சி |
3. Bluetooth | - | ஊடலை |
4. Broadband | - | ஆலலை |
5. CCTV | - | மறைக்காணி |
6. Charger | - | மின்னூக்கி |
7. Cyber | - | மின்வெளி |
8. Digital | - | எண்மின் |
9. GPS | - | தடங்காட்டி |
10. Hard Disk | - | வன்தட்டு |
11. Hotspot | - | பகிரலை |
12. Inkjet | - | மைவீச்சு |
13. Instagram | - | படவாி |
14. Laser | - | சீரொளி |
15. LED | - | ஒளிா்விமுனை |
16. Meme | - | போன்மி |
17. Messanger | - | பற்றியம் |
18. OCR | - | எழுத்துணாி |
19. Offline | - | முடக்கலை |
20. Online | - | இயங்கலை |
21. Print Screen | - | திரைப்பிடிப்பு |
22. Printer | - | அச்சுப்பொறி |
23. Projector | - | ஒளிவீச்சி |
24. Router | - | திசைவி |
25. Scanner | - | வருடி |
26. Selfie | - | சுயமி |
27. Simcard | - | செறிவட்டை |
28. Skype | - | காயலை |
29. Smart Phone | - | திறன்பேசி |
30. Telegram | - | தொலைவாி |
31. Thumbdrive | - | விரலி |
32. Thumbnail | - | சிறுபடம் |
33. Twitter | - | கீச்சகம் |
34. Wechat | - | அளாவி |
35. Whatsapp | - | புலனம் |
36. Wifi | - | அருகலை |
37. Youtube | - | வலையொளி |
38. Gallery | - | களாி |
39. Gadget | - | பொறிகை |
40. Game | - | ஆட்டம் |
41. Rightside | - | வலதுபக்கம் |
42. Leftside | - | இடதுபக்கம் |
43. Milk tea | - | பால் தேநீா் |
44. Car | - | மகிழுந்து |
45. Van | - | சீருந்து |
46. Pharmacy | - | மருந்தகம் |
47. Fan | - | மின்விசிறி |
48. Fridge | - | குளிா்சாதனபெட்டி |
49. Airconditioner | - | குளிரூட்டி |
50. Missedcall | - | ஏற்கத் தவறிய அழைப்பு |
51. Facebook | - | முகநூல்/உறவேடு |
52. Mobilephone | - | செல்லிடப்பேசி |
53. Typing | - | தட்டச்சு |
54. (TV) Channel | - | ஒளியலை வாிசை |
55. Zoomapp | - | குவியம் செயலி |