PDF chapter test TRY NOW
சாண்டியாகோ ஒரு மீனவர். நாள்தோறும் கடலுக்குச் சென்று மீன்களைப் பிடித்து வருபவர். இவருடன் மனோலின் என்னும் ஒரு சிறுவன் செல்வான். இறுதி எண்பத்து நான்கு நாட்கள் அவருக்கு ஒரு மீனும்கூட கிடைக்கவில்லை. ஊரிலுள்ள அனைவரும் மீன்பிடித் தொழிலில் இவரை அதிஷ்டமில்லாத கிழவன் என்று முத்திரைக் குத்தினர். இச்சூழலில்தான் மனோலின் தந்தை அதிஷ்டமில்லாதவருடன் மீன்பிடித் தொழிலுக்கு அனுப்பாமல் வேறொருவரிடம் பணிக்குச் செல்ல வேண்டும் என்றார். அதனால், மனோலின் இல்லாமல் தனியாகவே மீன்பிடிக்கச் செல்கிறார். முதல் நாற்பது நாட்கள் மட்டுமே மனோலின் அவருடன் சென்றான். அப்போது இருவரும் நல்ல நட்புடன் இருந்துள்ளனர். பெரும் உதவிகரமாய் இருந்துள்ளான்.
எண்பத்தைந்தாவது நாள் மீன்கள் எதுவும் கிடைக்காது பலரும் சொல்கின்றனர். இருப்பினும் செல்கிறார். தூண்டிலில் ஒரு சூரைமீனை மாட்டி வைத்து மீனுக்காகக் காத்துக்கொண்டிருக்கிறார். இன்று மீனோடுதான் கரைக்குத் திரும்பவேண்டும் என்னும் முடிவில் இரவு முழுவதும் காத்திருந்தார். தூண்டில் கயிற்றை ஏதோ ஒன்று இழுப்பது போலத் தோன்றியது. இழுத்தலில் அதுதான் மீன்தான் என்று கணித்தார். அத்தூண்டிலில் சிக்கிய மீனை வேகமாக இழுத்தது அந்த மீன். இந்தப் பக்கம் சாண்டியாகோவும் அதன் இழுவைக்கு ஈடுகொடுத்தார். மூர்க்கமான அம்மீன் சாண்டியாகோவைக் கடலுக்குள் இழுப்பது போல அந்தப் பக்கம் போராடியது. இரு புறம் போராட்டம் தொடர்ந்து நான்கு மணி நேரம் வரை நீடித்தது. இப்போராட்டத்தின் அயற்சியில் சற்றுக் கண்ணயர்ந்தும் போனார் சாண்டியாகோ.
மீண்டும் தூண்டில் அசைந்தது. சாண்டியாகோ கண் விழித்தார். உறக்கம் கலைந்தது. நீண்ட நெடிய போராட்டத்திற்குப் பின்பு அந்த மீனை ஈட்டியில் குத்தினார். அது இறந்து போனது. மிகப்பெரிய மீனாக இருந்ததால் படகுக்குள் அந்த மீன் அடங்கவில்லை. ஆதலால், படகின் பக்கவாட்டில் அதனை இழுத்துக் கட்டினார். தனது விடாமுயற்சியின் விளைவை உணர்ந்தார். கரைக்குத் திரும்புகையில் சுறாமீன்கள் படகில் கட்டி வைத்த மீனை உண்பதற்காகச் சூழ்ந்தன. அவற்றையும் தனது ஈட்டியால் தாக்கினார்.
இறுதியில் கரையை அடைந்தார். கடலில் நிகழ்ந்த அனைத்தையும் மனோலிடம் கூற வேண்டும் என்று எண்ணிய படியே படகினை இழுத்துக் கட்டினார். பின் படகில் தான் கட்டிய மீனைக் கண்டார். அது பல சுறாமீன்களால் அதன் சதைப்பகுதி அனைத்தும் இழந்த தன்மையில் காணப்பட்டு எழும்பும் தலையும் மட்டும் எஞ்சிய நிலையில் இருந்தது. சாண்டியாகோவைக் காண மனோலின் அவரது இல்லத்திற்கு வந்தான். தாத்தா, எவ்வளவு பெரிய மீன். மீன் பிடிப்பதில் மிகச் சிறந்தவன் என்பதை மீண்டும் நிரூபித்துவிட்டாய். இறுதியில் எலும்பும் தலையும்தான் கரைக்குக் கொண்டுவர முடிந்தது என்று மனநிலையை வெளிப்படுத்தினார். யாரும் உன்னை அதிஷ்டமில்லாவன் என்று தூற்றமாட்டார்கள் தாத்தா என்று தனது உரையாடலாக முன்வைத்தான்.