PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoஆசிரியர் குறிப்பும் நூற்குறிப்பும்
- ஆங்கிலப் புதினம் The old man and the sea
- அமெரிக்க எழுத்தாளர் எர்னஸ்ட் ஹெமிங்வே (Ernest Hemingway)
- பிறப்பு 21 சூலை 1899
- இறப்பு 2 சூலை 1961 (அகவை 61)
- 1951ஆம் ஆண்டு கியூபாவில் எழுதினார்.
- 1952ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.
- 1954 ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசை இந்நூலுக்குப் பெற்றார்.
- ஏழு புதினங்கள், ஆறு சிறுகதைத் தொகுப்புகள் இரண்டு அபுனைவு நூல்கள் இவரது படைப்பு.
- கிழவனும் கடலும் என்னும் தலைப்பில் இப்புதினம் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
- காலச்சுவடு பதிப்பகம் - தமிழில் மொழிபெயர்த்தவர் - எம்.எஸ் (எம்.சிவசுப்ரமணியம்)
- எஸ்.எஸ். பப்ளிகேஷன் - தமிழில் மொழிபெயர்த்தவர் - ச.து.சு. யோகியார்.
- கிழவனும் கடலும் (சுருக்கமான வடிவம்) – ச.மாடசாமி.
புதின வடிவமும் நோபல் பரிசும் :
- தற்கால இலக்கியத்தின் ஒரு வடிவம்தான் புதினம்.
- இவ்வடிவம் ஐரோப்பாவில் பதினெட்டாம் நூற்றாண்டில் உருவான ஒன்று.
- 1876இல் மாயூரம் வேதநாயகம் அவர்களால் பிரதாப முதலியார் சரித்திரம் தமிழில் எழுதப்பட்ட முதல் புதினம் ஆகும்.
- மொழிபெயர்ப்பு அல்லது மொழியாக்கம் என்பது மூல மொழியில் (Source Language) உள்ளதை மொழிக்கு மாற்றம் செய்தல்.
- கிறிஸ்தவ சமயத்தைப் பரப்பும் விதத்தில் பதினேழாம் நூற்றாண்டின் இறுதியில் இந்திய மொழிகளில் விவிலியம் முதன் முதலாக மொழிபெயர்க்கப்பட்ட நூலாகக் கூறப்படுகிறது.
- ஆல்பிரட் நோபல் நிறுவிய ஐந்து நோபல் பரிசுகளில் ஒன்று இலக்கியத்திற்கானது.
- 1901ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது.
- இந்தியாவில் இலக்கியத்திற்கான நோபல் பரிசை முதன் முதலாகப் பெற்றவர் இரவீந்திரநாத் தாகூர். இவ்விருது 1913ஆம் ஆண்டு கிடைத்தது.