PDF chapter test TRY NOW
அளபெடை :
அளபெடை என்பது நீண்டு ஒலித்தல். பூஉ, ஆஅ, ஏஎ, வாஅ.
1.உயிரளபெடை :
உயிர் எழுத்துகள் பன்னிரெண்டு நினைவு கூர்க.
உயிர் எழுத்துகள் இரண்டு வகையாகப் பிரிப்பர்.
1. உயிர்க்குறில் எழுத்துகள் ஐந்து.ஒரு மாத்திரை அளவு.
2. உயிர்நெடில் எழுத்துகள் ஏழு. இரண்டு மாத்திரை அளவு.
உயிர்நெடில் ஏழு எழுத்துகளும் தமக்குாிய இரண்டு மாத்திரை அளவில் இருந்து நீண்டு ஒலிக்கும்.
நெடில் எழுத்திற்குப்பின் அதற்கு இனமான குறில் எழுத்துகள் இடம்பெறும்.
உயிரளபெடை அளபெடுக்கும் இடங்கள் மூன்று :
மூன்று வகைகளில் அளபெடுக்கும்.
செய்யுளிசை அளபெடை :
செய்யுளில் ஓசை குறையும்போது, அவ்வோசையை நிறைவு செய்ய சொல்லின் முதல், இடை, இறுதி ஆகிய மூன்று இடத்திலும் உயிா் நெடில் ஏழும் அளபெடுத்து ஓசையை நிறைவு செய்யும். |
இன்னிசை அளபெடை அல்லது இசைநிறை அளபெடை :
செய்யுளில் ஓசை குறையாதபோதும் இனிய ஓசைக்காக உயிா்க்குறில் ஐந்தும் நெடிலாகிப் பின் அளபெடுக்கும்.
இசைநிறை அளபெடை என்றும் அழைப்பர்.
கெடுப்பதும் – கொடுப்பதூஉம்
உயிர்மெய் குறில் - து (த் + உ) உயிர்மெய் நெடில் - தூ (த் + ஊ) இன்னிசை அளபெடை – தூஉ |
சொல்லிசைஅளபெடை :
செய்யுளில் ஓசை குறையாத இடத்தும் ஒரு பெயா்ச் சொல்லை வினையெச்சமாக மாற்றும் பொருட்டு அளபெடுத்து வருவது சொல்லிசை அளபெடை.
உரனசை = உரன் + நசை
நசை – விருப்பம் (பெயர்ச் சொல்)
நசைஇ – விரும்பி (வினையெச்சம்)
நசைஇ – விரும்பி (வினையெச்சம்)
உரனசைஇ = உரன் + நசைஇ
நசைஇ – விரும்பி (வினையெச்சம்)
நசைஇ – விரும்பி (வினையெச்சம்)