PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
5. குற்றியலுகரம்
குறுமை + இயல் + இகரம் = குற்றியலுகரம்
குறுமை என்பது குறுகிய என்று பொருள்படும்.
இயல் என்பது ஓசை என்று பொருள்படும்.
உகரம் என்பது என்னும் உயிர்க் குறில் எழுத்து.
1. கொக்கு
2. காசு
3. காட்டு
4. கொத்து
5. காப்பு
6. காற்று
இந்த ஆறு சொற்களின் இறுதியில் வரும் கு, சு, டு, து, பு, று ஆகிய எழுத்துகளைப் பிரித்துக் கீழே காணலாம்.
 
KL 11.jpg
கு, சு, டு, து, பு, று – இந்த ஆறு எழுத்துகளும் வல்லின (6) உகரம் ஏறிய எழுத்துகள் என்பதை அறிகிறோம்.
  
மாத்திரை அளவுகள் :
  •  க், ச், ட், த், ப், ற் - ஆறு வல்லின எழுத்துகள் அரை  மாத்திரை அளவோடு ஒலிக்கக் கூடியவை.
  • உயிர்க் குறிலான கரம் ஒரு  மாத்திரை அளவு கொண்டது.
  
குற்றியலுகரம் :
  
ஒரு மாத்திரை அளவு கொண்டு ஒலிக்கும் உயிர்க்குறில் கர எழுத்து, உயிர்மெய்யாகிச் (கு, சு, டு, து, பு, று) சொல்லின் இறுதியில் வரும்போது, தனக்குாிய ஒரு மாத்திரை அளவிலிருந்து குறைந்து,  அரை மாத்திரையாக ஒலிக்கும். இதனைக் குற்றியலுகரம் என்பர்.
குறுகிய ஓசை உடைய குற்றியலுகர எழுத்துகள் சொற்களின் இறுதியில் கு, சு, டு, து, பு, று ஏதேனும் ஒரு எழுத்தைக் கொண்டு முடிந்தால் அது குற்றியலுகரம் எனப்படும்.
                                                                   சான்று : கொக்கு, காப்பு.
• புகு, பசு, சுடு, காவு, அறு – இச்சொற்களை வாசியுங்கள்.
• தனிக்குறிலை அடுத்தும் வரும் வல்லின உகரங்கள் மற்றும் வல்லின உகரம் அல்லாத, பிற உகர எழுத்துகள் எப்பொழுதும் தனக்குரிய ஓசையில் இருந்து குறையாமல், முழுமையாக ஒலிக்கும். இதனை முற்றியலுகரம் என்பர்.
குற்றியலுகரம் ஆறு (\(6\)) வகைப்படும்
ku 2.jpg
 
1. நெடில்தொடா்க் குற்றியலுகரம்
 
நெடில் எழுத்துகளைத் தொடா்ந்து வரும் குற்றியலுகரம்.
இச்சொற்கள் இரண்டு எழுத்துச் சொற்களாகவே அமையும்.
பாடு
மூடு
காசு
று
காடு.
 
2. ஆய்தத் தொடா்க்  குற்றியலுகரம் :
  
ஆய்த எழுத்தைத் (ஃ) தொடா்ந்து வரும் குற்றியலுகரம்.
து
து
து
கு.
 
3. உயிா்த் தொடா்க் குற்றியலுகரம் :
  
தனிநெடில் இல்லாமல் உயிா்மெய் எழுத்தைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரத்தை உயிர்த் தொடர் குற்றியலுகரம் என்பர். 
மிகு        (ள  = ள் + அ)
பாலாறு   (லா  = ல் + ஆ)
 
4. வன்தொடா்க்  குற்றியலுகரம்
  
வல்லின (க், ச், ட், த், ப், ற்) மெய் எழுத்தைத் தொடா்ந்து வரும் குற்றியலுகரம்.
வாக்கு
பாச்சு
காட்டு
த்து
மூப்பு
தொற்று.
 
5. மென்தொடா்க்  குற்றியலுகரம்
  
மெல்லின (ங், ஞ், ண், ந், ம், ன்) மெய் எழுத்தைத் தொடா்ந்து வரும் குற்றியலுகரம்.
ங்கு
ஞ்சு
ண்டு
ந்து
ம்பு
ன்று.
 
6. இடைத்தொடா்க் குற்றியலுகரம் :
  
இடையின (ய், ர், ல், வ், ழ், ள்) மெய் எழுத்தைத் தொடா்ந்து வரும் குற்றியலுகரம்.
கொய்து
சார்பு
சால்பு.