PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoதிருக்குறளுக்கு உள்ள வேறு பெயர்கள்
- உத்தரவேதம்
- பொய்யாமொழி
- வாயுரை வாழ்த்து
- தெய்வநூல்
- பொதுமறை
- முப்பால்
- தமிழ்மறை
- ஈரடி நூல்
- வான்மறை
- உலகப்பொதுமறை
வள்ளுவரின் பல பெயர்கள்
- தெய்வப் புலவர்
- செந்நாப் புலவர்
- தெய்வத் திருவள்ளுவர்
- செந்நாப் போதார்
- தெய்வத் திருவள்ளுவர்
- தெய்வப் புலமைத் திருவள்ளுவர்
- தேவர்
- திருவள்ளுவர்
- பொய்யில் புலவர்
- வள்ளுவ தேவன்
- வள்ளுவர்
- நாயனார்
- முதற்பாவலர்
- பெருநாவலர்
- பொய்யா மொழியார்
திருக்குறள் பற்றிய கூடுதல் தகவல்கள்
- தமிழ், கடவுள் என்னும் சொற்கள் திருக்குறளில் பயன்படுத்தவில்லை.
- 1812 ஆம் ஆண்டு திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்டது.
- வள்ளுவர் எழுதிய திருக்குறளுக்கு முதல் பெயர் முப்பால் என்பர்.
- அறத்துப்பாலில் 380 குறட்பாக்கள்
- பொருட்பாலில் 700 குறட்பாக்கள்
- இன்பத்துப்பாலில் 250 குறட்பாக்கள்
- குறட்பா அகரத்தில் தொடங்கி னகரத்தில் முடிகிறது.
- ஒவ்வொரு குறளும் இரண்டு அடிகளால் ஏழு சீர்களைக் கொண்டது.
- திருக்குறளில் மொத்த சொற்கள் 14,000 உள்ளன.
- திருக்குறளில் 42,194 எழுத்துகள் உள்ளன.
- தமிழ் எழுத்துகள் 247இல் 37 எழுத்துகள் மட்டும் திருக்குறளில் இடம்பெறவில்லை.
- திருவள்ளுவர் பதிவு செய்துள்ள இரு மலர்கள் - அனிச்சம், குவளை.
- திருவள்ளுவர் பதிவு செய்துள்ள ஒரே பழம் - நெருஞ்சிப் பழம்.
- திருவள்ளுவர் பதிவு செய்துள்ள ஒரே விதை – குன்றிமணி.
- வள்ளுவர் காலம் - கி.மு 31
- வள்ளுவர் பயன்படுத்தாத எண்ணுப் பெயர் - ஒன்பது (9)
- திருக்குறளை உரை இல்லாமல் அச்சுப் பணி செய்தவர் - ஞானப்பிரகாசர்
- இலத்தீனில் குறளை மொழிபெயர்த்த வெளிநாட்டவர் - வீரமாமுனிவர்
- திருக்குறளின் சிறப்புக்கும் பெருமைக்கும் துணையாக விளங்குகிறது திருவள்ளுவமாலை
- இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே என்று பதிவு செய்தவர் பாரதிதாசன்
- திருவள்ளுவர் இருமுறை பதிவு செய்துள்ள ஓரே அதிகாரம் - குறிப்பறிதல்
- எல்லீஸ் என்பவர் திருவள்ளுவர் படம் பொதிந்த நாணயத்தை வெளியிட்டுள்ளார்
- அறத்துப்பாலில் உள்ள இயல்கள் நான்கு.
- திருக்குறள் அச்சிடப்பட்ட ஆண்டு - 1812
- ஒரே திருக்குறளில் ஆறு முறை வந்துள்ள சொல் - பற்று
- திருக்குறள் பொருட்பாலில் 700 குறட்பாக்கள் உள்ளன.
- திருக்குறளில் மிகுதியாகப் பயன்படுத்தப்பட்ட ஓர் எழுத்து - னி
- திருக்குறளில் பயன்படுத்தப்படாத உயிர் எழுத்து - ஔ
- திருக்குறளில் 37 தமிழ் எழுத்துகள் இடம்பெறவில்லை என்கின்றனர்.
- பரிமேலழகர் - திருக்குறள் உரையாசிரியர்களுள் பத்தாவது உரையாசிரியர்
- திருக்குறளில் இரண்டு மரங்கள் இடம்பெற்றுள்ளன - பனை, மூங்கில்
- ஒரு திருக்குறளில் 7 சீர்கள் உள்ளது.
- திருக்குறளின் இயல்களின் எண்ணிக்கை – ஒன்பது (9)
- திருக்குறள் 107 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது என்கின்றனர்.