PDF chapter test TRY NOW
பிறப்பு, ஒலிப்பு ஆகியவற்றில் ஒத்த தன்மையில் இருக்கும் எழுத்துகளை இன எழுத்துகள் அல்லது நட்பு எழுத்துகள் என்பர்.
இவ்வினத்துகளை உயிர் இன எழுத்துகள், மெய் இன எழுத்துகள் என இரண்டாகக் கூறுவர்.
முதலில், உயிர் இன எழுத்துகளைக் காண்போம்.
உயிர் இன எழுத்துகள் :
உயிர் எழுத்துகள் (12) :
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | ஔ |
இப்பன்னிரெண்டு உயிர் எழுத்துகளை இரு வகையாகப் பிரிப்பர்.
1. குறில் (5)
2. நெடில் (7)
குறில் எழுத்துகள் (5) :
அ | இ | உ | எ | ஒ |
ஆகிய ஐந்தும் ஒரு மாத்திரை அளவு கொண்டு குறில் எழுத்துகளாக ஒலிக்கின்றன.
நெடில் எழுத்துகள் (7) :
ஆ | ஈ | ஊ | ஏ | ஐ | ஓ | ஔ |
ஆகிய ஏழும் இரண்டு மாத்திரை அளவு கொண்டு நெடில் எழுத்துகளாக ஒலிக்கின்றன.
இவற்றின், ஒத்த தன்மையைக் கொண்டு இன எழுத்துகளாகப் பிரிப்பர்.
அ | ஆ |
இ | ஈ |
உ | ஊ |
எ | ஏ |
___ | ஐ |
ஒ | ஓ |
___ | ஔ |
உயிர் எழுத்துகளில் நெடிலுக்கு குறில் இன எழுத்துகளாக வரும்.
ஆ | அ |
ஈ | இ |
ஊ | உ |
ஏ | எ |
ஐ | இ |
ஓ | ஒ |
ஔ | உ |
ஐ என்னும் நெடில் எழுத்துக்கு இ என்னும் குறில் எழுத்து இனமாகும்.
ஔ என்னும் நெடில் எழுத்துக்கு உ என்னும் குறில் எழுத்தும் இனமாகும்.
சொற்களில் உயிர் எழுத்துகள் இணைந்து வருவதில்லை.
அளபெடையில் மட்டும் உயிர்மெய் நெடிலைத் தொடர்ந்து அதற்கு இனமாகிய குறில் எழுத்து இணைந்து வரும்.
சான்றுகள் :
அம்மாஅ
வெரூஉம்
தம்பீஇ
தூஉம்
ஓஒதல்
நல்லபடாஅ
உறாஅர்க்கு
வரனசைஇ
உறாஅமை
எடுப்பதூஉம்
நச்சப்படாஅ
கெடுப்பதூஉம்
கொடுப்பதூஉம்
துய்ப்பதூஉம் அன்புஒரீஇ
இலாஅ
உண்பதூஉம்
உடுப்பதூஉம்
உறாஅ
மரீஇ
அதூஉம்
உரனசைஇ
Reference:
https://pixabay.com/photos/boy-girl-holding-hands-happy-young-358300/