PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
தமிழில் சில எழுத்துகள் தனித்து நின்று பொருள் தரும்.
 
ஒன்றுக்கு மேற்பட்ட எழுத்துகள் தொடர்ந்து வந்தும் பொருள் தரும்.
 
இவ்வாறு பொருள் தருபவை சொல் எனப்படும்.
 
(எ.கா.) ஈ, பூ, மை, கல், கடல், தங்கம்.
 
இலக்கண அடிப்படையில் சொற்கள்
 
பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் என நான்கு வகைப்படும்.
 
பெயர்ச்சொல்
 
ஒன்றன் பெயரைக் குறிக்கும் சொல் பெயர்ச்சொல் எனப்படும்.
 
(எ.கா.) பாரதி, பள்ளி, காலை, கண், நன்மை, ஓடுதல்.
 
வினைச்சொல்
 
வினை என்னும் சொல்லுக்குச் செயல் என்பது பொருள். செயலைக் குறிக்கும் சொல் வினைச்சொல் எனப்படும்.
 
(எ.கா.) வா, போ, எழுது, விளையாடு.
 
இடைச்சொல்
 
பெயர்ச்சொல்லையும் வினைச்சொல்லையும் சார்ந்து வரும் சொல் இடைச்சொல் ஆகும். இது தனித்து இயங்காது.
 
(எ.கா.) உம் – தந்தையும் தாயும் மற்று - மற்றொருவர் ஐ - திருக்குறளை
 
உரிச்சொல்
 
பெயர்ச்சொல், வினைச்சொல் ஆகியவற்றின் தன்மையை மிகுதிப்படுத்த வருவது உரிச்சொல் ஆகும்.
 
(எ.கா.) மா – மாநகரம் சால - சாலச்சிறந்த
 
  
*************
 
1. செய்தித்தாளில் விளையாட்டுச் செய்தி ஒன்றைப் படித்து, அதில் இடம்பெற்றுள்ள நால்வகைச் சொற்களை எழுதுக.
 
இந்தியா-இலங்கை இடையிலான உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் யுவராஜ்சிங்கிற்கு 3 முன்பாக இறங்கி 91 ரன்கள் அடித்து இந்தியாவை வெற்றி பெற செய்த தோனியின் செயல் சாலச் சிறந்த ஆட்டம் என கிரிக்கெட் வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
 
விடை:
 
1. இந்தியா, இலங்கை, யுவராஜ் சிங், தோனி – பெயர்ச்சொல்
 
2. அடித்தது, செயல் – வினைச்சொல்
 
3. இடையிலான – இடைச்சொல்
 
4. சாலச் சிறந்த – உரிச்சொல்
 
 
********
  
சிந்தனை வினா
 
1. நால்வகை சொற்களில் தனித்து இயங்குபவை எவை? எடுத்துக்காட்டுகள் தருக.
 
நால்வகைச் சொற்களில் தனித்து இயங்குபவை பெயர்ச்சொல், வினைச்சொல்.
 
எடுத்துக்காட்டு :
 
பெயர்ச்சொல் ஆறு வகைகள்.
 
(i) பொருட்பெயர் – புத்தகம், இராமன்
(ii) இடப்பெயர் – சென்னை, பள்ளி
(iii) காலப் பெயர் – ஆண்டு, குளிர்காலம்
(iv) சினைப் பெயர் – கண், காது
(v) குணப்பெயர் (பண்புப்பெயர்) – பசுமை, வட்டம்
(vi) தொழிற்பெயர் – ஓடுதல், பாடுதல்
 
வினைச்சொல் :
 
(i) ஓடினான்
(ii) போ
(iii) எழுது
(iv) வந்தான்
(v) சென்றான்