PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoநினைவு கூர்க
தமிழ் எழுத்துகளை இரண்டு வகையாகப் பிரிப்பர்.
1.முதலெழுத்து
2.சார்பெழுத்து
1. முதலெழுத்து
உயிர் எழுத்தும் 12
மெய் எழுத்து 18
இணைந்த 30 எழுத்துகளும் முதலெழுத்தாகும்.
2. சார்பெழுத்து
பத்து வகைப்படும்
1. | உயிர்மெய் |
2. | ஆய்தம் |
3. | உயிரளபெடை |
4. | ஒற்றளபெடை |
5. | குற்றியலுகரம் |
6. | குற்றியலிகரம் |
7. | ஐகாரக் குறுக்கம் |
8. | ஔகாரக் குறுக்கம் |
9. | மகரக் குறுக்கம் |
10. | ஆய்தக் குறுக்கம் |
இப்பாடப்பகுதியில் ஐகாரக் குறுக்கம், ஔகாரக் குறுக்கம், மகரக் குறுக்கம், ஆய்தக் குறுக்கம் ஆகிய நான்கையும் விரிவாகக் காணலாம்.
ஒவ்வோர் எழுத்துக்கும் அதை ஒலிப்பதற்கு உரிய கால அளவு உண்டு. இதை மாத்திரை என்பர்.
ஆனால், எல்லா எழுத்துகளும் எல்லா இடங்களிலும் தனக்குரிய மாத்திரை அளவில் முழுமையாக ஒலிப்பதில்லை.
சில எழுத்துகள் சில இடங்களில் தமக்குரிய கால அளவைவிடக் குறைவாக ஒலிக்கும்.
இவ்வாறு, குறைந்து ஒலிக்கும் எழுத்துகளைக் குறுக்கங்கள் என்கிறோம்.
நால்வகைக் குறுக்கம்
குறுக்கம் நான்கு வகைப்படும். குறுக்கம் என்பது குறுகி ஒலிப்பது.
ஐகாரக் குறுக்கம்
ஐ என்னும் உயிர்நெடில் எழுத்து தனித்து ஒலிக்கும் மாத்திரை அளவு இரண்டு.
பை, தை, மை, கை என்பதான ஓரெழுத்து ஒருமொழியிலும் ஒலிக்கும் மாத்திரை அளவு இரண்டு.
தனக்குரிய இரண்டு மாத்திரை அளவிலிருந்து ஒன்றரை அல்லது ஒரு மாத்திரையாகவோ குறைந்து ஒலித்தால் அது ஐகாரக் குறுக்கம் எனப்படும்.
ஐ - எழுத்தைத் தனியாக உச்சாிக்கும் பொழுது தனக்குாிய இரண்டு மாத்திரை அளவிலேயே முழுமையாக ஒலிக்கும் என்பதைக் கண்டோம்.
ஐ - எழுத்தைச் சொல்லாக அமைத்தால், அது தன் மாத்திரை அளவிலிருந்து குறைந்து ஒலிக்கும்.
அது சொற்களின் முதலிலும், இடையிலும், இறுதியிலும் (கடையிலும்) ஆகிய மூன்று இடத்திலும் ஐகாரமானது குறைந்து ஒலிக்கும்.
மையம் - (ம்+ஐ=மை) மொழி முதலில் வந்த ஐகாரமானது, தனக்குரிய இரண்டு மாத்திரை அளவிலிருந்து குறைந்து ஒன்றரை (1 ½) மாத்திரையாக ஒலிக்கும்.
அமைச்சு - (ம்+ஐ=மை) மொழி இடையில் வந்த ஐகாரமானது, தனக்குரிய இரண்டு மாத்திரை அளவிலிருந்து குறைந்து ஒரு மாத்திரையாக ஒலிக்கும்.
கடலை – (ல்+ஐ=லை) மொழி இறுதியில் (கடையில்) வந்த ஐகாரமானது, தனக்குரிய இரண்டு மாத்திரை அளவிலிருந்து குறைந்து ஒரு மாத்திரையாக ஒலிக்கும்.