PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoதிரிசொற்களை ஒரு பொருள் குறித்த பல திரிசொற்கள் எனவும், பல பொருள் குறித்த ஒரு திரிசொல் எனவும் இரு வகைப்படுத்தலாம்.
வங்கம், அம்பி, நாவாய் – என்பன கப்பல் என்னும் ஒரே பொருளைத் தருவதான சொல் ஒரு பொருள் குறித்த பல திரிசொற்கள் என்பர்.
இதழ் என்னும் சொல் பூவின் இதழ், உதடு, கண்ணிமை, நாளிதழ் ஆகிய பல பொருள்களைத் தருவதான சொல் பல பலபொருள் குறித்த ஒரு திரிசொல் என்பர் .
திசைச் சொல்
பிறமொழிகளில் இருந்து வந்து தமிழில் வழங்கி வருபவை யாகும்.
இவ்வாறு வடமொழி தவிர, பிற மொழிகளில் இருந்து வந்து தமிழில் இடம்பெறும் சொற்கள் திசைச்சொற்கள் எனப்படும்.
முற்காலத்தில், பாண்டி நாட்டைத் தவிர, தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் வழங்கிய கேணி (கிணறு), பெற்றம் (பசு) போன்ற சொற்களையும் திசைச் சொற்கள் என்றே வழங்கினர்.
வட சொல்
வருடம், மாதம், கமலம், விடம், சக்கரம் முதலிய சொற்கள் தமிழில் வழக்கில் இருந்தாலும் இவை தமிழ்ச் சொற்கள் அல்ல .
இவை வடமொழி எனப்படும் சமஸ்கிருத மொழிச்சொற்கள் ஆகும்.
இவ்வாறு வடமொழியிலிருந்து வந்து தமிழில் இடம்பெறும் சொற்கள் வடசொற்கள் எனப்படும்.
வடசொற்கள் தற்சமம், தற்பவம் என இரு வகையாகப் பிரிப்பர் .
கமலம், அலங்காரம் என வடமொழியில் இருப்பது போன்றே தமிழில் எழுதுவதைத் தற்சமம் என்பர்.
லக்ஷ்மி என்பதை இலக்குமி என்றும், விஷம் என்பதை விடம் என்றும் தமிழ் எழுத்துகளால் மாற்றி எழுதுவதைத் தற்பவம் என்பர் .
Reference:
தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்.
மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்.
தமிழ்ப் பாடப் புத்தகம் - வகுப்பு ஏழு - திருந்திய பதிப்பு 2020.
நன்னூல் எழுத்ததிகாரம் - மணிவாசகர் பதிப்பகம் சென்னை. பதிப்பு - சூலை, 2001.