PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoஉயிர் நெடில்ஆறு எழுத்துகள் ஓரெழுத்து ஒரு மொழிகளாகப்பொருள் தருகின்றன.
வரிசை எண் | உயிர் நெடில் | பொருள் |
1 | ஆ | பசு |
2 | ஈ | கொடு |
3 | ஊ | இறைச்சி |
4 | ஏ | அம்பு |
5 | ஐ | தலைவன் |
6 | ஓ | மதகுநீர் - தாங்கும் பலகை |
மேற்கண்ட ஆறு உயிர் நெடிலுடன் வல்லின ஒற்றுகளான க், ச், த், ப் உடன் இணைத்து உயிர்மெய் நெடில் எழுத்துகளாகி ஓரெழுத்து ஒருமொழி பொருளாகத் தருகின்றன.
க வரிசை(நெடில்) – 4
கா | கூ | கை | கோ |
சோலை | பூமி | ஒழுக்கம் | அரசன் |
ச வரிசை (நெடில்) – 4
சா | சீ | சே | சோ |
இறந்து போ | இகழ்ச்சி | உயர்வு | மதில் |
த வரிசை (நெடில்) – 5
தா | தீ | தூ | தே | தை |
கொடு | நெருப்பு | தூய்மை | கடவுள் | தைத்தல் |
ப வரிசை (நெடில்) – 5
பா | பூ | பே | பை | போ |
பாடல் | மலர் | மேகம் | கைப்பை | செல் |
மெல்லின ஓரெழுத்து ஒருமொழிகள்
ந வரிசை (நெடில்) – 5
நா | நீ | நே | நை | நோ |
நாவு | முன்னிலை ஒருமை | அன்பு | இழிவு | வறுமை |
ம வரிசை (நெடில்) – 5
மா | மீ | மூ | மே | மை | மோ |
மரம் | வான் | மூப்பு | அன்பு | அஞ்சனம் | முகத்தல் |
இடையின ஓரெழுத்து ஒருமொழி
ய வரிசை(நெடில்) – 1
யா என்பதன் பொருள் அகலம்
வ வரிசை (நெடில்) – 4
வா | வீ | வை | வௌ |
அழைத்தல் | மலர் | வைக்கோல் | கவர் |
குறில் (இரண்டு)ஓரெழுத்து ஒருமொழிகள்
நொ (ந் + ஒ) - நோய்
து (த் + உ) - உண்
Reference:
தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்.
மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்.
தமிழ்ப் பாடப் புத்தகம் - வகுப்பு ஏழு - திருந்திய பதிப்பு 2020.
நன்னூல் எழுத்ததிகாரம் - மணிவாசகர் பதிப்பகம் சென்னை. பதிப்பு - சூலை, 2001.