PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free DemoAnswer variants:
உவமேயம்
அணி
என்பர்
அழகு
போல
உவமை
சொல்லாலும்
போன்ற
பொருளாலும்
போன்ற
என்னும் சொல்லுக்கு என்பது பொருள்.
ஒரு செய்யுளைச் , அழகு பெறச் செய்தலை அணி .
உவமை அணி
மயில் போல ஆடினாள்
மீன் கண்
இத்தொடர்களைப் படியுங்கள்.
இத்தொடர்களில் நடனம் ஆடும் பெண்ணோடு மயிலையும், கண்ணுடன் மீனையும் ஒப்பிட்டுள்ளனர்.
இவ்வாறு ஒப்பிட்டுக் கூறப்படும் பொருளை (மயில், கண்) அல்லது உவமானம் என்பர்.
உவமையால் விளக்கப்படும் பொருளை என்பர்.
இத்தொடர்களில் வந்துள்ள ‘போல’, என்பவை உவம உருபுகளாகும்.
அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை. (பொறையுடைமை)
பூமி தன்னைத் தோண்டுபவரைப் பொறுத்துக் கொள்வது போல நாம் நம்மை இகழ்ந்து பேசுபவரைப் பொறுத்துக்கொள்ள வேண்டும் என்பது இக்குறளின் பொருள்.
இதில் பூமி தன்னைத் தோண்டுபவரைப் பொறுத்துக் கொள்ளுதல் என்பது உவமை.
நாம் நம்மை இகழ்ந்து பேசுபவரைப் பொறுத்துக்கொள்ள வேண்டும் என்பது ஒப்பிடப்படும் பொருள் (உவமேயம்).
‘போல’ என்பது உவம உருபு.
ஒரு பாடலில் உவமையும், உவமேயமும் வந்து உவம உருபு வெளிப்படையாக வந்தால் அது உவமை அணி எனப்படும்.
போல, புரைய, அன்ன, இன்ன, அற்று, இற்று, மான, கடுப்ப, ஒப்ப, உறழ போன்றவை உவம உருபுகளாக வரும்.