PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
கூடுதல் விளக்கம்
  
உருவக அணியின் இலக்கணம்
 
உவமையாகின்ற பொருளுக்கும் (உவமானம்) உவமிக்கப்படும் (உவமேயம்) பொருளுக்கும் இடையிலான வேறுபாட்டை நீக்கி, அவை இரண்டும் ஒன்றே என்னும் உள்ளுணர்வு தோன்றுமாறு ஒற்றுமைப் படுத்திக் கூறுவது உருவகம் என்னும் அணியாகும்.
 
அதாவது உவமேயத்தில் உவமானத்தை ஏற்றிக் கூறுதல்.
 
இதனை,
 
உவமையும் பொருளும் வேற்றுமை ஒழிவித்து
ஒன்று என மாட்டின் அஃது உருவகம் ஆகும்.  (தண்டி. 35)
என்ற நூற்பாவால் அறியலாம்.
 
உருவக அணி விளக்கம்
 
உவமையணியில் உவமானம் முன்னும் உவமேயம் பின்னும் இருக்கும். இரண்டினுக்கும் ஒப்புமைக் காட்ட இடையில் போல, புரைய, அன்ன முதலான உவமைஉருபுகளுள் ஒன்று வரும்.
 
உருவக அணியில் உவமேயம் முன்னும் உவமானம் பின்னும் வரும்.
 
இவற்றை ஒற்றுமைப்படுத்துவதற்காக 'ஆகிய' என்ற உருபு இடையில் வரும். 'ஆக' என்ற உருபும் வருவதுண்டு. இவை 'உருவக உருபுகள்' என்று கூறப்படும். இவை மறைந்து வருதலும் உண்டு.
 
மலர் போன்ற கண், மலர்க்கண் - உவமை
 
கண் ஆகிய மலர், கண்மலர் - உருவகம்
 
உருவக அணியின் வகைகள் உருவக அணி மொத்தம் பதினைந்து வகைப்படும் என்று தண்டியலங்காரம் காட்டுகிறது. (தண்டி - 37
 
1.தொகை உருவகம்
  
2.விரி உருவகம்
  
3.தொகைவிரி உருவகம்
  
4.இயைபு உருவகம்
  
5.இயைபு இல்உருவகம்
  
6.வியனிலை உருவகம்
  
7.சிறப்பு உருவகம்
  
8.விரூபக உருவகம்
  
9.சமாதான உருவகம்
  
10.உருவக உருவகம்
  
11.ஏகாங்க உருவகம்
  
12.அநேகாங்க உருவகம்
  
13.முற்று உருவகம்
  
14.அவயவ உருவகம்
  
15.அவயவி உருவகம்