PDF chapter test TRY NOW
படித்தான், ஆடுகின்றாள், பறந்தது, சென்ற, கண்டு ஆகியவை செயலை அடிப்படையாகக் கொண்ட சொற்கள் ஆகும்.
செயலை வினை என்றும் குறிப்பர்.
இவ்வாறு ஒன்றன் செயலைக் குறிக்கும் சொல் வினைச்சொல் எனப்படும்.
வினைமுற்று
மலர்விழி எழுதினாள்
கண்ணன் பாடுகிறான்
மாடு மேயும்
இத்தொடர்களில் எழுதினாள், பாடுகிறான், மேயும் ஆகிய சொற்களைக் கவனியுங்கள்.
இவ்வாறு பொருள் முற்றுப் பெற்ற வினைச்சொற்களை முற்றுவினை அல்லது வினைமுற்று என்பர்.
வினைமுற்றுஐந்து பால், மூன்று காலம், மூன்று இடம் ஆகிய அனைத்திலும் வரும்.
வினைமுற்று தெரிநிலை வினைமுற்று, குறிப்பு வினைமுற்று என இரு வகைப்படும்.
தெரிநிலை வினைமுற்று
ஒரு செயல் நடைபெறுவதற்குச் செய்பவர், கருவி, நிலம், செயல், காலம், செய்பொருள் ஆகிய ஆறும் முதன்மையானவை ஆகும்.
இவை ஆறும் வெளிப்படுமாறு அமைவது தெரிநிலை வினைமுற்று எனப்படும்.
செய்பவன் கருவி நிலம் செயல் காலம் செய்பொருள் ஆறும் தருவது வினையே - நன்னூல் - 319 என்பது நன்னூல் நூற்பா.
சான்று
மாணவி கட்டுரை எழுதினாள்
செய்பவர் - மாணவி
காலம் - இறந்தகாலம்
கருவி - தாளும் எழுதுகோலும்
செய்பொருள் - கட்டுரை
நிலம் - பள்ளி
செயல் - எழுதுதல்
சான்று
வரைந்தவன் - (செய்பவன்) ஓவியன்
வரைய உதவியது - (கருவி) தூரிகை
வரைந்த இடம் - (நிலம்) ஓவியக்கூடம்
வரைதல் - (செயல்) ஓவிய வரைவு
வரையப்பட்டது - (செய்பொருள்) ஓவியம்
வரைந்த காலம் - (காலம்) இறந்தகாலம்.
ஒரு தெரிநிலை வினைமுற்றுச் சொல்லில் பகுதியால் செயலும், விகுதியால் வினை செய்த வரும், இடைநிலையால் காலமும் வெளிப்படையாகப் புலப்படும்.
செய்தான்
செய் - பகுதி - செய்தல் என்னும் வினையைக் குறித்தது.
ஆன் - விகுதி - உயர்திணை ஆண்பாலைக் குறித்தது.
த் - இடைநிலை - இறந்தகாலம் குறித்தது.