PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
வினையெச்சம்
 
தொழிலையும் காலத்தையும் உணர்த்தி வினையைக் கொண்டு முடியும் சொல் வினைச்சொல் ஆகும்.
 
சான்று
  
படித்து முடித்தான்
  
வந்து சென்றான்
  
ஓடி மறைந்தான்
  
பாடி முடித்தான்
  
சென்று வந்தான்
 
மேற்கணடவற்றுள் படித்து, வந்து, ஓடி, பாடி, சென்று போன்றவை வினையெச்சங்கள் ஆகும்.
 
படித்து முடித்தான்
  
வந்து சென்றான்
  
ஓடி மறைந்தான்
  
பாடி முடித்தான்
  
சென்று வந்தான்
 
முதலில் படித்து, வந்து, சென்று போன்ற வார்த்தைகளை நன்றாக உச்சரித்துப் பாருங்கள்.
 
அவ்வார்த்தைகள 'உ' என்னும் சத்தத்தோடு முடியும்..
 
படித்து- இதன் கடைசி எழுத்து 'து' 'து' என்ற எழுத்தை பிரித்தால் த்+உ என்று பிரியும்.
 
பாடி, ஆடி, ஓடி என்ற வார்த்தைகளை உச்சரித்துப் பாருங்கள்.
 
அவ்வார்த்தைகள் 'இ' சத்தத்தில் முடியும்.
 
பாடி - இதன் கடைசி எழுத்து 'டி' 'டி' என்ற எழுத்தைப் பிரித்தால் ட்+இ என்று பிரியும்.
 
இப்படி வார்த்தையின் இறுதியில் 'உ' மற்றும் 'இ' என்னும் சத்தம் ஒலித்தால் அது வினையெச்சம்தான் என முடிவெடுத்துக் கொள்ளவும்.
 
வினையெச்சம் வகைகள்
 
தெரிநிலை வினையெச்சம், குறிப்பு வினையெச்சம் என வினையெச்சம் வகைப்படும்.
 
தெரிநிலை வினையெச்சமானது
 
வெளிப்படையாகக் காலத்தைக் காட்டி வினைச்சொல்லைக் கொண்டு முடியும்.
 
சான்று
  
வந்து போனான்
  
நின்று வந்தான்
 
குறிப்பு வினையெச்சமானது
 
வெளிப்படையாகக் காலத்தைக் காட்டாமல் பண்பின் அடிப்படையில் வினைச்சொல்லைக் கொண்டு முடியும்.
சான்று

மெல்ல நடந்தான்

கோபமாகப்
பேசினான்.
 
ஒரு வினைமுற்றுச் சொல் வினையெச்சப் பொருளில் வந்து, மற்றொரு வினைமுற்றைக் கொண்டு முடிவது முற்றெச்சமாகும்.
 
முற்றாக இருக்கும் சொல் எச்சப் பொருளில் வழங்குவது முற்றெச்சமாகும்.
 
சான்று   
  
ஓடினன் வீழ்ந்தான்   
  
படித்தனன் தேறினான்
  
Reference:
தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்.
மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்.
தமிழ்ப் பாடப் புத்தகம் - வகுப்பு எட்டு - திருந்திய பதிப்பு 2020.
 
நன்னூல் எழுத்ததிகாரம் - மணிவாசகர் பதிப்பகம் சென்னை. பதிப்பு - சூலை, 2001.