PDF chapter test TRY NOW

வினைச்சொல்
ஒரு பொருளின் செயலைக் குறிக்கும் சொல்லுக்கு வினைச்சொல் என்று பெயர்.
 
அம்மா  அழைக்கிறாள்
  
பாப்பா  வருகிறாள்
  
என்னும் தொடர்களில் அம்மா, பாப்பா என்னும் பெயர்கள் உயிர் உள்ளவர்களைக் குறிக்கும்.
 
நிலம்  அதிர்ந்தது
  
நீர்  ஓடுகிறது
 
என்னும் தொடர்களில் உள்ள நிலம், நீர் என்னும் பெயர்கள் உயிரற்ற பொருள்களைக் குறிக்கும்.
 
உயிர்ப்பொருள், உயிரற்ற பொருள் ஆகியவற்றின் செயலையே வினை என்கிறோம்.
 
அலை வருகிறது
  
அலையைப் பார்
 
இத்தொடர்களில் அலை என்பது பெயர்ச் சொல்லாகும்.
 
வெயிலில் அலையாதே
  
ஏன் அலைகிறாய்
 
இத்தொடர்களில் அலை என்பது வினைச் சொல்லாகும்.
 
படித்தான்
  
ஆடுகின்றாள்
  
பறந்தது
  
சென்ற
  
கண்டு
 
ஆகியவை செயலை அடிப்படையாகக் கொண்ட சொற்கள் ஆகும்.
 
செயலை வினை என்றும் குறிப்பர்.
 
ஒன்றன் செயலைக் குறிக்கும் சொல் வினைச்சொல் எனப்படும்.
 
வினைச்சொல் காலத்தைக்  காட்டும்; வேற்றுமை உருபை  ஏற்காது
 
வினைச் சொற்களை முற்றுவினை, எச்சவினை என இரண்டாகப் பிரிக்கலாம்.
 
எச்ச  வினையைப் பெயரெச்சம், வினையெச்சம் எனப் பிரிக்கலாம்.
 
வந்தான் - வினைமுற்று
  
வந்து - வினையெச்சம்
 
வந்து போனான் - வினையெச்சம் 
 
வந்த - பெயரெச்சம்
  
வந்த - பையன்