PDF chapter test TRY NOW

பெயர்ச்சொல்லின் பொருளை வேறுபடுத்தும் முறைமையை வேற்றுமை என்பர்.
 
வேற்றுமை உருபுகள் பெயர்ச்சொல்லுடன் இணைக்கப்படும் அசைகளை வேற்றுமை உருபு என்பர்.
 
வேற்றுமை  எட்டு வகைப்படும்
 
முதல் வேற்றுமை
 
இரண்டாம் வேற்றுமை
 
மூன்றாம் வேற்றுமை
 
நான்காம் வேற்றுமை
 
ஐந்தாம் வேற்றுமை
 
ஆறாம் வேற்றுமை
 
ஏழாம் வேற்றுமை
 
எட்டாம் வேற்றுமை
 
முதல் வேற்றுமை
 
எழுவாயுடன் வேற்றுமை உருபுகள் எதுவும் இணையாமல் எழுவாய் தனித்து நின்று இயல்பான பொருளைத் தருவது முதல் வேற்றுமை.
 
முதல் வேற்றுமையை எழுவாய் வேற்றுமை என்றும் குறிப்பிடுவர்.
 
 எ.கா – பாவை வந்தான்
 
இரண்டாம் வேற்றுமை
 
உருபு
 
ஒரு பெயரைச் செயப்படுபொருளாக வேறுபடுத்திக் காட்டுவதால் இரண்டாம்  வேற்றுமையைச்  செயப்படுபொருள் வேற்றுமை என்றும் கூறுவர்.
 
இரண்டாம் வேற்றுமை - ஆக்கல், அழித்தல், அடைதல், நீத்தல், ஒத்தல், உடைமைஆகிய ஆறு வகையான பொருள்களில் வரும்
 
ஆக்கல்
  
 கரிகாலன் கல்லணையைக் கட்டினான்
 
அழித்தல் 
 
பெரியார் மூடநம்பிக்கைகளை ஒழித்தார்
 
அடைதல்
  
 கோவலன் மதுரையை அடைந்தான்
 
நீத்தல்
 
காமராசர் பதவியைத் துறந்தார்
 
ஒத்தல்
  
 தமிழ் நமக்கு உயிரைப் போன்றது
 
உடைமை
 
வள்ளுவர் பெரும் புகழை உடையவர்