PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoதமிழ், அமுதம் ஆகிய இரு சொற்களையும் சேர்த்துச் சொல்லிப் பாருங்கள். தமிழமுதம்
என்று ஒலிக்கிறது அல்லவா?
இவற்றுள் முதலில் உள்ள சொல்லை நிலைமொழி என்றும் அதனுடன் வந்து
சேரும் சொல்லை வருமொழி என்றும் கூறுவர்.
இவ்விரு சொற்களும் சேரும்போது
நிலைமொழியின் இறுதி எழுத்தும் வருமொழியின் முதல் எழுத்தும் இணைகின்றன.
இவ்வாறு நிலைமொழி ஈறும், வருமொழி முதலும் இணைவதைப் புணர்ச்சி என்கிறோம்.
நிலைமொழியின் இறுதி எழுத்து உயிர் எழுத்தாக இருந்தால் அஃது உயிரீற்றுப் புணர்ச்சி
எனப்படும்.
(எ.கா.) சிலை + அழகு = சிலையழகு (லை=ல்+ஐ)
நிலைமொழியின் இறுதி எழுத்து மெய் எழுத்தாக இருந்தால் அஃது மெய்யீற்றுப்
புணர்ச்சி எனப்படும்.
(எ.கா.) மண் + அழகு = மண்ணழகு
வருமொழியின் முதல் எழுத்து உயிர் எழுத்தாக இருந்தால் அஃது உயிர்முதல் புணர்ச்சி
எனப்படும்.
(எ.கா.) பொன் + உண்டு = பொன்னுண்டு
வருமொழியின் முதல் எழுத்து மெய் எழுத்தாக இருந்தால் அது மெய்முதல் புணர்ச்சி
எனப்படும்.
(எ.கா.) பொன் + சிலை = பொற்சிலை (சி = ச்+ இ)
இயல்பு புணர்ச்சியும் விகாரப் புணர்ச்சியும்
நிலைமொழியும் வருமொழியும் எவ்வித மாற்றமும் இன்றி இணைவது இயல்பு
புணர்ச்சி ஆகும்.
(எ.கா.) தாய் + மொழி = தாய்மொழி (இரு சொற்களிலும் எம்மாற்றமும்
நிகழவில்லை.)