PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoஅல்வழிப் புணர்ச்சியில் வரும் வல்லினம் மிகல் அல்வழிப் புணர்ச்சியில் வரும் தொடர்கள் தொகை நிலைத்தொடர், தொகாநிலைத் தொடர் என இருவகைப்படும்.
இவ்விரு வகைத் தொடர்களில் வரும் வல்லினம் மிகும் இடங்களைப் பற்றிப் பார்ப்போம்.
தொகை நிலைத் தொடர்களில் வரும் வல்லினம் மிகல் அல்வழிப் புணர்ச்சியில் வரும் தொகைநிலைத் தொடர்கள் வினைத்தொகை, பண்புத்தொகை (இருபெயரொட்டுப் பண்புத்தொகையும் இதில் அடங்கும்), உவமைத் தொகை, உம்மைத்தொகை, அன்மொழித் தொகை ஆகிய ஐந்தும் ஆகும்.
i) பண்புத்தொகையில் வரும் வல்லினம் மிகும்.
சான்று :
சிவப்பு + துணி = சிவப்புத்துணி
புதுமை + பெண் = புதுமைப்பெண்
தீமை + குணம் = தீமைக்குணம்
வெள்ளை + தாள் = வெள்ளைத்தாள்
மெய் + பொருள் = மெய்ப்பொருள்
பொய் + புகழ் = பொய்ப்புகழ்
புது + துணி = புதுத்துணி
பொது + பண்பு = பொதுப்பண்பு
ii) இருபெயரொட்டுப் பண்புத்தொகையில் வரும் வல்லினம் மிகும்.
நிலைமொழியில் சிறப்புப் பெயரும் வருமொழியில் பொதுப்பெயருமாகச் சேர்ந்து வரும். இடையில் ஆகிய என்ற பண்பு உருபு மறைந்து வரும். இதுவே இருபெயரொட்டுப் பண்புத்தொகை எனப்படும். இருபெயரொட்டுப் பண்புத்தொகையில் வரும் வல்லினம் மிகும்.
சான்று :
மார்கழி + திங்கள் = மார்கழித் திங்கள்
வெள்ளி + கிழமை = வெள்ளிக் கிழமை
மல்லிகை + பூ = மல்லிகைப்பூ
சாரை + பாம்பு = சாரைப்பாம்பு
உழவு + தொழில் = உழவுத்தொழில்
iii) உவமைத் தொகையில் வரும் வல்லினம் மிகும்.
சான்று :
மலர் + கண் = மலர்க்கண்
(மலர் போன்ற கண்)
தாமரை + கை = தாமரைக்கை
(தாமரை போன்ற கை)
தொகாநிலைத் தொடர்களில் வரும் வல்லினம் மிகல் எழுவாய்த் தொடர், விளித்தொடர், பெயரெச்சத் தொடர், வினையெச்சத் தொடர், தெரிநிலை வினைமுற்றுத் தொடர், குறிப்பு வினைமுற்றுத் தொடர், இடைச்சொல் தொடர், உரிச்சொல் தொடர், அடுக்குத்தொடர் என்னும் ஒன்பதும் அல்வழிப் புணர்ச்சியில் வரும் தொகாநிலைத் தொடர்கள் ஆகும்.