PDF chapter test TRY NOW
பாவலர்கள் தம் உள்ளத்தில் தோன்றும் உயர்ந்த கருத்துகளைப் பாடல்களாகப் படைக்கின்றனர்.
குறிப்பிட்ட வடிவத்தில் இலக்கணத்திற்கு உட்பட்டு எழுதப்படும் கவிதைகளை மரபுக் கவிதைகள் என்பர்.
இலக்கணக் கட்டுப்பாடுகளின்றிக் கருத்துக்கு மட்டும் முதன்மை கொடுத்து எழுதப்படும் கவிதைகளைப் புதுக் கவிதைகள் என்பர்.
மரபுக்கவிதைகள் எழுதுவதற்கான இலக்கணம் யாப்பு இலக்கணம் எனப்படும்.
யாப்பு இலக்கணத்தின்படி செய்யுளுக்கு உரிய உறுப்புகள் ஆறு.
அவை
எழுத்து
அசை
சீர்
தளை
அடி
தொடை
என்பனவாகும்.
எழுத்து
யாப்பிலக்கணத்தின்படி எழுத்துகளை மூன்றாகப் பிரிப்பர்.
அவையாவன :
குறில் - உயிர்க்குறில், உயிர்மெய்க்குறில்
நெடில் - உயிர்நெடில், உயிர்மெய் நெடில்
ஒற்று - மெய்யெழுத்து, ஆய்த எழுத்து