PDF chapter test TRY NOW
இந்தியா மிகப்பெரிய நாடு.
மட்டைப்பந்தில் இந்தியா வென்றது.
இவ்விரு தொடர்களிலும் அமைந்துள்ள இந்தியா என்னும் சொல்லைக் கவனியுங்கள்.
முதல் தொடரில் உள்ள இந்தியா இடத்தைக் குறிக்கின்றது.
இரண்டாம் தொடரில் இந்திய வீரர்களைக் குறிக்கின்றது.
இவ்வாறு ஒரு பொருளின் பெயர், தனக்குரிய பொருளைக் குறிக்காமல் தன்னோடு தொடர்புடைய வேறோரு பொருளுக்குத் தொன்றுதொட்டுப் பெயராகி வருவது ஆகுபெயர் எனப்படும்.
ஒன்றின் இயற்பெயர் அதனோடு தொடர்புடைய மற்றொன்றிற்குத் தொன்றுத்தொட்டு ஆகிவருவது ஆகுபெயர்.
ஆகுபெயர் பதினாறு வகைப்படும்.
அவை,
1. பொருளாகுபெயர் (முதலாகுபெயர்)
2. இடவாகுபெயர்
3. காலவாகுபெயர்
4. சினையாகுபெயர்
5. பண்பாகுபெயர்
6. தொழிலாகுபெயர்
7. கருவியாகுபெயர்
8. காரியாகுபெயர்
9. கருத்தாகுபெயர்
10. எண்ணலளவைஆகுபெயர்
11. எடுத்தலளவைஆகுபெயர்
12. முகத்தலளவைஆகுபெயர்
13. நீட்டலளவைஆகுபெயர்
14. உவமையாகுபெயர்
15. சொல்லாகுபெயர்
16. தானியாகுபெயர்
பொருள்முதல் ஆறோடு அளவை சொல்தானி
கருவி காரியம் கருத்தன் ஆதியுள்
ஒன்றன் பெயரான் அதற்கியை பிறிதைத்
தொன்முறை உரைப்பன ஆகுபெயரே. - நன்னூல் 290