PDF chapter test TRY NOW
வ.எண் | ஆகுபெயர் | சான்று | விளக்கம் |
1 | பொருளாகுபெயர் (முதலாகுபெயர்) | முல்லையைத் தொடுத்தாள் | முதற்பொருளாகிய முல்லைக்கொடி, அதன் சினை(உறுப்பு)யாகிய பூவுக்கு ஆகி வந்தது. |
2 | இடவாகுபெயர் | வகுப்பறை சிரித்தது | வகுப்பறைஎன்னும் இடப்பெயர் அங்குள்ள மாணவர்களுக்கு ஆகி வந்தது. |
3 | காலவாகுபெயர் | கார் அறுத்தான் | கார் என்னும் காலப்பெயர் அக்காலத்தில் விளையும் பயிருக்கு ஆகி வந்தது. |
4 | சினையாகுபெயர் | மருக்கொழுந்து நட்டான் | மருக்கொழுந்து என்னும் சினைப்(உறுப்பு) பெயர், அதன் செடிக்கு ஆகிவந்தது. |
5 | பண்பாகுபெயர் | மஞ்சள் பூசினாள் | மஞ்சள்என்னும் பண்பு, அவ்வண்ணத்தில்உள்ள கிழங்குக்கு ஆகிவந்தது. |
6 | தொழிலாகுபெயர் | வற்றல் தின்றான் | வற்றல் என்னும் தொழிற்பெயர் வற்றிய உணவுப்பொருளுக்கு ஆகி வந்தது |
7 | கருவியாகுபெயர் | வானொலி கேட்டு மகிழ்ந்தனர் | வானொலி என்னும் கருவி, அதன் காரியமாகிய நிகழ்ச்சிகளுக்கு ஆகி வந்தது |
8 | காரியாகுபெயர் | பைங்கூழ் வளர்ந்தது | கூழ் என்னும் காரியம் அதன் கருவியாகிய பயிருக்கு ஆகி வந்தது |
9 | கருத்தாகுபெயர் | அறிஞர் அண்ணாவை படித்திருக்கிறேன் | அறிஞர் அண்ணா என்னும் கருத்தாவின் பெயர், அவர் இயற்றிய நூல்களுக்கு ஆகி வருகிறது. |
10 | எண்ணலளவைஆகுபெயர் | ஒன்று பெற்றால் ஒளிமயம் | ஒன்று என்னும் எண்ணுப்பெயர், அவ்வெண்ணுக்குத் தொடர்புடைய குழந்தைக்கு ஆகி வந்தது. |
11 | எடுத்தலளவைஆகுபெயர் | இரண்டு கிலோகொடு | நிறுத்தி அளக்கும் எடுத்தல்என்னும் அளவைபெயர், அவ்வளவையுள்ள பொருளுக்கு ஆகி வந்தது |
12 | முகத்தலளவைஆகுபெயர் | அரை லிட்டர் வாங்கு | முகந்து அளக்கும் முகத்தல்அளவைபெயர், அவ்வளவையுள்ள பொருளுக்கு ஆகி வந்தது |
13 | நீட்டலளவைஆகுபெயர் | ஐந்து மீட்டர் வெட்டினான் | நீட்டி அளக்கும் நீட்டலளவைப்பெயர், அவ்வளவையுள்ள பொருளுக்கு ஆகி வந்தது. |
14 | உவமையாகுபெயர் | நாரதர் வருகிறார் | நாரதர் என்னும் பெயர் அவரைக் குறிக்காமல், அவரைப்போன்ற வேறொருவர்க்கு ஆகிவந்தது |
15 | சொல்லாகுபெயர் | வள்ளுவர் சொல் | வாழ்க்கைக்கு இனிது வள்ளுவர்சொல் என்பது சொல்லைக் குறிக்காமல் பொருளுக்குப் பெயராகி வந்தது |
16 | தானியாகுபெயர் | பாலை இறக்கு | பாலின் பெயரைக் குறிக்காமல் பாத்திரத்தைக் குறிக்கிறது. ஓர் இடத்தில் உள்ள ஒரு பொருளின் பெயர் (தானி) அது சார்ந்திருக்கும் இடத்திற்குப் (தானியத்திற்கு) பெயராகி வரும். |
இடம் பொருளுக்கு ஆகி வருவது இடவாகுப் பெயர்.
பொருள், இடத்திற்கு ஆகிவருவது தானியாகு பெயர்.