PDF chapter test TRY NOW

(iv) இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகையில் வரும் வல்லினம் மிகும்.
 
சான்று :
 
நகை + கடை = நகைக்கடை
 
(நகையை விற்கும் கடை)
 
தயிர் + குடம் = தயிர்க்குடம்
 
(தயிரை உடைய குடம்)
 
எலி + பொறி = எலிப்பொறி
 
(எலியைப் பிடிக்கும் பொறி)
 
மலர் + கூந்தல் = மலர்க்கூந்தல்
 
(மலரை உடைய கூந்தல்)
 
நெய் + குடம் = நெய்க்குடம்
 
(நெய்யை உடைய குடம்)
 
(v) மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகையில் வரும் வல்லினம் மிகும்.
 
சான்று :
 
வெள்ளி + கிண்ணம் = வெள்ளிக் கிண்ணம்
 
(வெள்ளியால் ஆகிய கிண்ணம்)
 
இரும்பு + பெட்டி = இரும்புப் பெட்டி
 
(இரும்பினால் ஆகிய பெட்டி)
 
தேங்காய் + சட்னி = தேங்காய்ச் சட்னி
 
(தேங்காயால் ஆன சட்னி)
 
பித்தளை + குடம் = பித்தளைக் குடம்
 
(பித்தளையால் ஆன குடம்)
 
(vi) நான்காம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகையில் வரும் வல்லினம் பெரும்பாலும் மிகும்.  
 
சான்று :
 
கோழி + தீவனம் = கோழித் தீவனம்
 
(கோழிக்கு உரிய தீவனம்)
 
குழந்தை + பால் = குழந்தைப் பால்
 
(குழந்தைக்கு ஏற்ற பால்)
 
(vii) ஐந்தாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகையில் வரும் வல்லினம் மிகும்.
 
சான்று :
 
வாய் + பாட்டு = வாய்ப்பாட்டு
 
(வாயிலிருந்து வரும் பாட்டு)
 
கனி + சாறு = கனிச்சாறு
 
(கனியிலிருந்து எடுக்கப்படும் சாறு)
 
(viii) ஏழாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகையில் வரும் வல்லினம் மிகும்.
  
சான்று :
 
தண்ணீர் + பாம்பு = தண்ணீர்ப்பாம்பு
 
(தண்ணீரில் உள்ள பாம்பு)
 
சென்னை + கல்லூரி = சென்னைக் கல்லூரி
 
(சென்னையில் உள்ள கல்லூரி)
 
மதுரை + கோயில் = மதுரைக்கோயில்
 
(மதுரையில் உள்ள கோயில்)
 
மலை + பாம்பு = மலைப்பாம்பு
 
(மலையில் உள்ள பாம்பு)
 
(ix) ஆறாம் வேற்றுமைத் தொகையில் நிலைமொழி அஃறிணையாய் இருப்பின், அதன் முன்னர் வரும் வல்லினம் மிகும்.
 
சான்று :
 
கிளி + கூண்டு = கிளிக்கூண்டு
புலி + குட்டி = புலிக்குட்டி
நரி + பல் = நரிப்பல்
வாழை + தண்டு = வாழைத்தண்டு
எருமை + கொம்பு = எருமைக் கொம்பு
தேர் + சக்கரம் = தேர்ச்சக்கரம்