PDF chapter test TRY NOW
எட்வர்டு வந்தான்.
இந்தச் சொற்றொடரில்பெயர்ச்சொல்எட்வர்டு என்பதாகும்.
இந்தச் சொற்றொடர் எழுவதற்கு அடிப்படையாக அமைந்த பெயர்ச் சொல்லையே எழுவாய் என்கிறோம்.
கனகாம்பரம் பூத்தது.
இந்தச் சொற்றொடரில் வினைச்சொல் பூத்தது. இந்த வினைச்சொல்லே பயனிலை ஆகும்.
ஒரு தொடரில் பயன் நிலைத்து இருக்கும் இடத்தைப் பயனிலை என்கிறோம்.
மீனா கனகாம்பரத்தைச் சூடினாள்.
இத்தொடரில், சொற்றொடர் எழுவதற்குக் காரணமாக அமைந்த மீனா என்னும் பெயர்ச்சொல்லே எழுவாய் ஆகும். அவ்வெழுவாயின் பயனிலை சூடினாள் என்பதாகும்.
எனில், மற்றொரு பெயர்ச்சொல்லான கனகாம்பரம் என்பது யாது? அது செயப்படுபொருள் என்று அழைக்கப்படுகிறது .
எழுவாய் ஒரு வினையைச் செய்ய அதற்கு அடிப்படையாய்த் தேர்ந்தெடுக்கப்பட்ட பொருளே, செயப்படுபொருள் ஆகும்.
படித்தாய்.
இத்தொடரில் படித்தாய் என்பது பயனிலை. நீ என்னும் எழுவாய் வெளிப்படையாகத் தெரியவில்லை.
இதைத் தோன்றா எழுவாய் என்று கூறுகிறோம்.
நான் வந்தேன்.
இத்தொடரில் வினைமுற்று பயனிலையாக வந்தது. இது வினைப் பயனிலை எனப்படும்.
சொன்னவள் கலா.
இங்கு கலா என்னும் பெயர்ச்சொல் பயனிலையாக வந்துள்ளது. இது பெயர்ப் பயனிலை எனப்படும்.