PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoசந்தி
உறுத்தும் | த் - சந்தி | த், ப், க் |
பொருந்திய | ய் - உடம்படுமெய் சந்தி | ய்,வ் |
சாரியை
நடந்தனன் | அன் - சாரியை | அன், ஆன், இன், அல், அற்று, இற்று, அத்து, அம், தம் நம், நும், ஏ, அ, உ, ஐ, கு, ன் |
எழுத்துப்பேறு
பகுபத உறுப்புகளுள் அடங்காமல் பகுதி.
விகுதிக்கு நடுவில் காலத்தை உணர்த்தாமல் வரும் மெய்யெழுத்து எழுத்துப்பேறு ஆகும்.
பெரும்பாலும் 'த்' மட்டுமே வரும்.
சாரியை இடத்தில் 'த்' வந்தால் அது எழுத்துப்பேறு.
எடுத்துக்காட்டு
வந்தனன் :
வா(வ) + த் (ந்) + த் + அன் + அன்
வா - பகுதி ('வ' ஆனது விகாரம்)
த் (ந்) - சந்தி ('ந்’ ஆனது விகாரம்)
த் - இறந்தகால இடைநிலை விகுதி
அன் - சாரியை
அன் - ஆண்பால் வினைமுற்று விகுதி
செய்யாதே :
செய் + ய் + ஆ + த் + ஏ
செய் - பகுதி
ய் - சந்தி
ஆ - எதிர்மறை இடைநிலை
த் - எழுத்துப்பேறு
ஏ - முன்னிலை ஒருமை ஏவல் வினைமுற்று விகுதி