PDF chapter test TRY NOW
செய்வினை, செயப்பாட்டுவினை
அப்பா சொன்னார், குமுதா, இலையில் உள்ள இட்டிலியை விரைந்து சாப்பிடு. அடுத்துத் தோசை வரப்போகிறது; அவன் சாப்பிட்டு முடிப்பதற்குள். தோசை வைக்கப்பட்டது.
அப்பர் சொன்னார் - செய்வினைத் தொடர்
தோசை வைக்கப்பட்டது - செயப்பாட்டுவினைத் தொடர்
இது போலவே,
பாட்டுப் பாடுகிறாள் - செய்வினைத் தொடர்
பாட்டுப் (அவனால்) பாடப்பட்டது - செயப்பாட்டு வினைத் தொடர்
'படு' என்னும் துணை வினைச்சொல் செயப்பாட்டு வினைத்தொடரில், சேர்ந்துவிடுகிறது.
'படு' என்பதைப் போல, 'உண், பெறு முதலான துணைவினைகள் செயப்பாட்டு வினைகளாக அமைகின்றன.
அவற்றைப் போலவே எச்சங்களுடன் சேர்ந்து ஆயிற்று, போயிற்று, போனது முதலான துணை வினைகள்செயப்பாட்டுவினைகளை உருவாக்குகின்றன.
கோவலன் கொலையுண்டான்
ஓவியம் குமரனால் வரையப்பட்டது
வீடு கட்டியாயிற்று
சட்டி உடைந்து போயிற்று
பணம் காணாமல் போனது
தெரிந்து தெளிவோம்
செய்பவரை முதன்மைப்படுத்தும் வினை செய்வினை;
செயப்படுபொருளை முதன்மைப்படுத்தும் வினை செயப்பாட்டு வினை.
பயன்பாட்டுத் தொடர்கள்
அப்துல் நேற்று வந்தான் | தன்வினைத் தொடர் |
அப்துல் நேற்று வருவித்தான் | பிறவினைத் தொடர் |
கவிதா உரை படித்தாள் | செய்வினைத் தொடர் |
உரை கவிதாவால் படிக்கப்பட்டது | செயப்பாட்டுவினைத் தொடர் |
குமரன் மழையில் நனைந்தான் | உடன்பாட்டுவினைத் தொடர் |
குமரன் மழையில் நனையவில்லை | எதிர்மறைவினைத் தொடர் |
என் அண்ணன் நாளை வருவான் | செய்தித் தொடர் |
எவ்வளவு உயரமான மரம்! | உணர்ச்சித் தொடர் |
உள்ளே பேசிக்கொண்டிருப்பவர் யார்? | வினாத் தொடர் |
பூக்களைப் பறிக்காதீர் | கட்டளைத் தொடர் |
அவன் மாணவன் இது நாற்காலி | பெயர்ப் பயனிலைத் தொடர் |