PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
ஆ, ஏ, கா, ஒ, உ, கொ, கி - ஆகிய எழுத்துகளை ஒலித்துப் பாருங்கள்.
 
இந்த எழுத்துகள் ஒரே இடத்தில் இருந்து பிறப்பது போல ஒலிப்பது போல இருந்தாலும் அவை, வெவ்வேறான இடங்களில் காற்று அடைபடுவதால்  பிறக்கின்றன.
 
மேலும், இதழும் வெவ்வேறான வடிவத்திற்குச் சென்று இவ்வெழுத்துகளை ஒலிப்பதற்கு துணைநிற்கின்றன.
 
இப்படி எழுத்துகள் ஒவ்வொன்றும் அது பிறக்கும்  இடமும்  பிறக்கும்  முயற்சியும் வெவ்வேறானவை.
பிறப்பு :
11 (1).svg
உயிரின் முயற்சியால் உடலின் உள்ளிருந்து எழும் காற்றானது 
 
மார்பு   
  
தலை  
  
கழுத்து 
  
மூக்கு 
  
ஆகிய நான்கு இடங்களுள் ஒன்றில் பொருந்தி,
 
இதழ்  
  
நாக்கு  
  
பல்
  
மேல்வாய்
 
ஆகிய உறுப்புகளின் முயற்சியினால் வேறுவேறு ஒலிகளாகத் தோன்றுகின்றன.
 
இதனை எழுத்துகளின் பிறப்பு என்பர்.
நிறையுயிர் முயற்சியின் உள்வளி துரப்ப
எழும்அணுத் திரள்உரம் கண்டம் உச்சி
மூக்குஉற்று இதழ்நாப் பல்லணத் தொழிலின்
வெவ்வேறு எழுத்தொலி யாய்வரல் பிறப்பே. நன்னூல்  நூற்பா  -  74.
  
10.svg
எழுத்துகளின் இடப் பிறப்பு:
உயிர் எழுத்துகள்  பன்னிரண்டும்  கழுத்தை இடமாகக் கொண்டு பிறக்கின்றன.
 
வல்லின மெய் எழுத்துகள் ஆறும்  மார்பை இடமாகக் கொண்டு பிறக்கின்றன.
 
மெல்லின மெய் எழுத்துகள் ஆறும்  மூக்கை இடமாகக் கொண்டு பிறக்கின்றன.
 
இடையின மெய் எழுத்துகள் ஆறும்  கழுத்தை இடமாகக் கொண்டு பிறக்கின்றன. 
 
ஆய்த எழுத்து  தலையை இடமாகக் கொண்டு பிறக்கிறது.
அவ்வழி
ஆவி  இடைமை இடம்மிடறு ஆகும்
மேவும் மென்மை மூக்கு உரம்பெறும் வன்மை.  நன்னூல்  நூற்பா  -  75.
எழுத்துகளின் முயற்சிப் பிறப்பு  :
உயிர் எழுத்துகள் பிறப்பு முறை :
அ, ஆ  ஆகிய இரண்டு உயிர் எழுத்துகளும் வாயைத் திறக்கக்கூடிய முயற்சியால் பிறக்கின்றன.
அவற்றுள்
முயற்சியுள்ள அ ஆ அங்காப் புடைய. நன்னூல் நூற்பா  -  76.
3.svg
 
இ, ஈ, எ, ஏ, ஐ ஆகிய ஐந்தும் உயிர் எழுத்துகளும் வாயைத் திறக்கக்கூடிய முயற்சியுடன் நாக்கின் அடி ஓரமானது மேல்வாய் பல்லைப் பொருந்தும் முயற்சியால் பிறக்கின்றன.
இ ஈ எ ஏ ஐ அங் காப்போடு
அண்பல் முதல்நா விளிம்புற வருமே. நன்னூல் நூற்பா  -  76.
2.svg
 
உ, ஊ, ஒ, ஓ, ஒள ஆகிய உயிர் எழுத்துகள் ஐந்தும் வாயைத் திறக்கக்கூடிய முயற்சியுடன் இதழ்களைக் குவிப்பதால் பிறக்கின்றன.
உ ஊ ஒ ஓ ஔ இதழ் குவிவே. நன்னூல் நூற்பா  -  78.
1.svg