PDF chapter test TRY NOW
இலக்கிய முறைப்படி
1. இயற்சொல்
2. திரிச்சொல்
3. திசைச்சொல்
4. வடசொல்
என சொற்கள் நான்கு வகைப்படும்.
இலக்கண முறைப்படி
1. பெயர்ச்சொல்
2. வினைச்சொல்
3. இடைச்சொல்
4. உரிச்சொல்
எனச் சொற்கள் நான்கு வகைப்படும்.
இலக்கிய முறைப்படிக்கான சொற்களின் வகைகளைக் காண்போம்.
இயற்சொல்
இவற்றின், பொருள் இயல்பாகவே எளிதில் விளங்குகிறது.
இவ்வாறு, எளிதில் பொருள் விளங்கும் வகையில் அமைந்த சொற்கள் இயற்சொற்கள் எனப்படும்.
இயற்சொல் பெயர், வினை, இடை, உரி ஆகிய நான்கு வகையிலும் வரும்.
மண், பொன் | - பெயர்இயற்சொல் |
நடந்தான், வந்தான் | - வினை இயற்சொல் |
அவனை, அவனால் | - இடைஇயற்சொல் |
மாநகர் | - உரி இயற்சொல் |
திரிச்சொல்
வங்கூழ், அழுவம், சாற்றினான், உறுபயன் ஆகிய சொற்களைக் கவனியுங்கள்.
இச்சொற்கள் இலக்கியங்களில் பயின்று வரும் சொற்களாகும்.
இவை முறையே
வங்கூழ் | - காற்று |
அழுவம் | - கடல் |
சாற்றினான் | - சொன்னான் |
உறுபயன் | - மிகுந்த பயன் |
எனப் பொருள் தரும்.
இவ்வாறு கற்றோர்க்கு மட்டுமே விளங்குவதாகவும் இலக்கியங்களில் மட்டுமே பயின்று வருபவையாகவும் அமையும் சொற்கள் திரிசொற்கள் எனப்படும்.
திரிசொல் பெயர், வினை, இடை, உரி ஆகிய நான்கு வகையிலும் வரும்.
அழுவம், வங்கம் | - பெயர்த் திரிசொல் |
இயம்பினான், பயின்றாள் | - வினைத் திரிச்சொல் |
அன்ன, மான | - இடைத் திரிச்சொல் |
கூர், கழி | - உரித் திரிச்சொல் |