PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoஇலக்கண முறையுடன் பிழையின்றிப் பேசுவதும் எழுதுவதும் வழா நிலை எனப்படும்.
இலக்கண முறையின்றிப் பேசுவதும் எழுதுவதும் வழு எனப்படும்.
இரு திணையும் ஐம்பாலும் மூவிடமும் காலமும் வினாவும் விடையும் பல வகை மரபுகளும் ஆகிய ஏழும் தொடர்களில் இலக்கணப் பிழைகளுடன் வந்தால் அவையும் வழு எனப்படும்.
அவ்வாறு இலக்கணப் பிழைகள் இல்லா திருப்பின் அவை வழா நிலை எனப்படும்.
வழு | வழாநிலை | |
திணை | செழியன் வந்தது | செழியன் வந்தான் |
பால் | கண்ணகி உண்டான் | கண்ணகி உண்டாள் |
இடம் | நீ வந்தேன் | நீ வந்தாய் |
காலம் | நேற்று வருவான் | நேற்று வந்தாய் |
வினா | ஒரு விரலைக் காட்டிச் ' சிறியதோ? பெரியதோ?' என்று கேட்டல் | இரு விரல்களைக் காட்டி 'எது சிறியது? எது பெரியது?' என்று கேட்டல் |
விடை | கண்ணன் எங்கே இருக்கிறார்?' என்ற வினாவிற்குக் கண்ணாடி பைக்குள் இருக்கிறது என்று விடையளித்தல் | கண்ணன் எங்கே இருக்கிறார்? என்ற வினாவிற்குக் கண்ணன் வீட்டிற்குள் இருக்கிறார் என்று விடையளித்தல் |
மரபு | தென்னை மரங்கள் உள்ள பகுதியைத் தென்னந்தோட்டம் என்று கூறுதல் | தென்னை மரங்கள் உள்ள பகுதியைத் தென்னந்தோப்பு என்று கூறுதல் |
வழுநிலை | வழாநிலை | |
திணை | அரசன் வந்தது | அரசன் வந்தான் |
பால் | கவி உண்டான் | கவி உண்டாள் |
இடம் | நீவிர் வந்தேன் | நீவிர் வந்தாய் |
காலம் | நேற்று வருவான் | நேற்று வந்தாய் |
வினா | ஒரு மனினைக் காட்டிச் 'சிறியவர் யார்? பெரியவர் வார்?' என்று கேட்டல் | இரு மனிதனைக் காட்டி'சிறியவர் யார்? பெரியவர் வார்?' என்று கேட்டல் |
விடை | அண்ணன் எங்கே இருக்கிறார்?' என்ற வினாவிற்குக் அண்ணன் பானையில் இருக்கிறது என்று விடையளித்தல் | கண்ணன் எங்கே இருக்கிறார்? என்ற வினாவிற்குக் அண்ணன் வீட்டிற்குள் இருக்கிறார் என்று விடையளித்தல் |
மரபு | மாமரங்கள் உள்ள பகுதியைத் மாந்தோட்டம் என்று கூறுதல் | மாமரங்கள் உள்ள பகுதியைத் மாந்தோப்பு என்று கூறுதல். |