PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoவேற்றுமையாவது யாது? பெயர்ப்பொருளை வேற்றுமை செய்வன 'வேற்றுமை' எனப்படும்.
ஏற்கும் எவ்வகைப் பெயர்க்கும் ஈறாய்ப்பொருள் வேற்றுமை செய்வன எட்டே வேற்றுமை (நன்னூல். 291)
ஒரு சொற்றொடரில் உள்ள பெயர்ச்சொல்லுக்கும் வினைச் சொல்லுக்கும் இடையே உள்ள இலக்கண உறவுகளை வேறுபடுத்திக் காட்டுவதும் வேற்றுமையாகும்.
'இராமன் அழைத்தான்'
'இராமனை அழைத்தான்'
'இராமனுடன் சென்றேன்'
'இராமனுக்குக் கொடுத்தேன்'
'இராமன் வீட்டில் இருந்தான்'
இந்தப் பொருள் தொடர்பைத் தமிழில் 'வேற்றுமை' (case) என்கிறோம்.
ஒட்டுகளை'வேற்றுமை உருபு' (case marker) என்கிறோம்.
வேற்றுமையை ஆங்கிலத்தில் 'case' என்று குறிப்பிடுகின்றனர்.
இந்த 'case' என்ற ஆங்கிலச்சொல் பிரெஞ்சு மொழியிலிருந்து உருவானதாகும்.
அச்சொல்லும் இலத்தீன் மொழிச்சொல்லாகிய 'causes' என்ற சொல்லிலிருந்து உருவானது.
இதுவும் கிரேக்க மொழிச்சொல்லாகிய ptosis என்பதிலிருந்து வந்தது.
இச்சொல்லுக்கு 'வீழ்ச்சி'(fall) அல்லது 'மாற்றம்'(change) என்ற பொருளுண்டு.
இந்நிலையில் இதனை 'வேற்றுமை' என்று தமிழில் அழைப்பது பொருத்தமானது.
வேற்றுமையைப் பற்றிக் குறிப்பிட வந்த தொல்காப்பியர், வேற்றுமை தாமே ஏழென மொழிப. (தொல்.சொல். 62)
விளிகொள்வதன்கண் விளியோடு எட்டே (தொல்.சொல். 63)
இவற்றை ஒழுங்குபடுத்திக் கூற அவர் அவை தாம் பெயர் ஐ ஒடு கு இன் அது கண் விளி என்னும் ஈற்ற (தொல்.சொல். 64)
வேற்றுமையின் பெயர்கள்
1) முதல் வேற்றுமை-எழுவாய் வேற்றுமை (Nominative/ subjective case)
2) இரண்டாம் வேற்றுமை-செயப்படுபொருள் வேற்றுமை (Accusative case)
3) மூன்றாம் வேற்றுமை-கருவி வேற்றுமை (Instrumental case)
4)நான்காம் வேற்றுமை-கொடை வேற்றுமை (Dative case)
5) ஐந்தாம் வேற்றுமை-நீங்கல் வேற்றுமை (Ablative case)
6) ஆறாம் வேற்றுமை-உடைமை வேற்றுமை (Genetive case)
7) ஏழாம் வேற்றுமை-இடவேற்றுமை (Locative case)
8) எட்டாம் வேற்றுமை-விளிவேற்றுமை (Vocative case)
Reference:
தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம். மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம். தமிழ்ப் பாடப் புத்தகம் - வகுப்பு எட்டு - திருந்திய பதிப்பு 2020. நன்னூல் எழுத்ததிகாரம் - மணிவாசகர் பதிப்பகம் சென்னை. பதிப்பு - சூலை, 2001.