PDF chapter test TRY NOW

வினா
 
தாம் எதிர்பார்க்கும் கருத்தைப் பெறுவதற்கு ஒருவரிடம் எவ்வாறு வினவ வேண்டும் என்பதை விளக்குவது வினாப்பகுதி.
 
வினா ஆறு வகைப்படும்.
 
1)அறி வினா
 
2)அறியா வினா
 
3)ஐய வினா
 
4)கொளல்வினா
 
5)கொடைவினா
 
6)ஏவல்வினா
 
ஒரு வினா, யாரிடம் யார் வினவுவது என்பதைப் பொருத்து வேறுவகையாக மாற்றம் பெறும் என்பது கவனிக்கத்தக்கது.
 
அறிவறி யாமை ஐயுறல் கொளல்கொடை
ஏவல் தரும்வினா ஆறும் இழுக்கார் - நன்னூல் - 385
வினா 
 
1. அறி வினா 
 
தான் விடை அறிந்திருந்தும், அவ்விடை பிறருக்குத் தெரியுமா என்பதை அறியும் பொருட்டு வினவுவது அறி வினா ஆகும்.
 
சான்று 
  
மாணவரிடம், “இந்தக் கவிதையின் பொருள் யாது?” என்று ஆசிரியர் கேட்டல்
 
2. அறியா வினா 
 
தான் அறியாத ஒன்றை அறிந்து கொள்வதற்காக வினவுவது
 
சான்று
 
ஆசிரியரிடம், “இந்த கவிதையின் பொருள் யாது?” என்று மாணவர் கேட்டல்
 
3. ஐய வினா 
 
தான் ஐயம் நீங்கித் தெளிவு பெறுவதற்காகக் கேட்கப்படுவது
 
சான்று
 
 “இச்செயலை செய்தது மங்கையா? மணிமேகலையா?” என வினவுதல் .