PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoமேற்சொன்னவற்று ள் வெண்பாவின் இலக்கணத்தையும் அலகிடும். முறையினையும் தெரிந்துகொள்வோம்.
குறள் வெண்பா என்பது வெண்பாவின் பொது இலக்கணம் அமையப்பெற்று இரண்டு அடிகளாய் வரும். முதலடி நான்கு சீராகவும். (அளவடி) இரண்டாம் அடி மூன்று சீராகவும் (சிந்தடி) வரும்.
அலகிடுதல்
செய்யுளின் சீரை அசை பிரித்து நேரசை, நிரையசை என்று பகுத்துக் காண்பதை முன் வகுப்பில் அறிந்துள்ளோம்.
அலகிடுதல் என்பது சீரைப் பிரித்து அசை பார்த்து, அசைக்கேற்ற வாய்பாடு காணுதல்.
அலகிடுதல்
எ.கா.
உலகத்தோ டொட்ட வொழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார்.
வ.எண் | சீர் | அசை | வாய்பாடு |
1 | உல/கத்/தோ | நிரை நேர் நேர் | புளிமாங்காய் |
2 | டொட்/ட | நேர் நேர் | தேமா |
3 | வொழு/கல் | நிரை நேர் | புளிமா |
4 | பல/கற்/றும் | நிரை நேர் நேர் | புளிமாங்காய் |
5 | கல்/லார் | நேர் நேர் | தேமா |
6 | அறி/விலா | நிரை நிரை | கருவிளம் |
7 | தார் | நேர் | நாள் |
யாப்போசை தரும் பாவோசை
1. செப்பலோசை - இருவர் உரையாடுவது
போன்ற ஓசை
2. அகவலோசை - ஒருவர் பேசுதல் போன்ற சொற்பொழிவாற்றுவது போன்ற ஓசை
3. துள்ளலோசை கன்று துள்ளினாற்போலச் சீர்தோறுந் துள்ளிவரும் ஓசை, அதாவது தாழ்ந்து உயர்ந்து வருவது.
4. தூங்கலோசை - சீர்தோறுந் துள்ளாது தூங்கிவரும் ஓசை. தாழ்ந்தே வருவது. யாப்பதிகாரம் புலவர் குழந்தை