PDF chapter test TRY NOW
இரு விதையிலை மற்றும் ஒரு விதையிலை தாவர வேர்களுக்கு இடையேயுள்ள வேறுபாடுகள்:
இரு விதையிலை தாவர வேர்:
- சைலக் கற்றைகளின் எண்ணிக்கை: நான்கு முனை சைலம் உள்ளது
- கேம்பியம்: காணப்படும் (இரண்டாம் நிலை வளர்ச்சியின் போது மட்டும்)
- இரண்டாம் நிலை வளர்ச்சி: உண்டு
- பித் அல்லது மெட்டுல்லா: இல்லை
- இணைப்பு திசு: பாரன்கைமா
எ. கா: அவரை
ஒரு விதையிலை தாவர வேர்:
- சைலக் கற்றைகளின் எண்ணிக்கை: பலமுனை சைலம் உள்ளது
- கேம்பியம்: இல்லை
- இரண்டாம் நிலை வளர்ச்சி: இல்லை
- பித் அல்லது மெட்டுல்லா: உண்டு
- இணைப்பு திசு: ஸ்கிளிரன்கைமா
எ. கா: சோளம்
இரு விதையிலை மற்றும் ஒரு விதையிலை தாவர தண்டுகளுக்கு இடையேயுள்ள வேறுபாடுகள்:
இரு விதையிலைத் தாவரதண்டு:
புறத்தோலடித்தோல்: கோலன்கைமா
தளத்திசு: புறணி, அகத்தோல், பெரிசைக்கிள் மற்றும் பித் என்னும் வேறுபாடு காணப்படுகிறது
வாஸ்குலார் கற்றை:
- குறைவான எண்ணிக்கையில் சம அளவுடன் காணப்படும்
- வளைய வடிவில் இருக்கும்
- திறந்தவை - கேம்பியம் உண்டு
- கற்றை உறை இல்லை
இரண்டாம் நிலை வளர்ச்சி: உண்டு
பித்: உண்டு
மெடுல்லரி கதிர்கள்: உண்டு
ஒரு விதையிலைத் தாவரதண்டு:
புறத்தோலடித்தோல்: ஸ்கிளிரன்கைமா
தளத்திசு: புறணி, அகத்தோல், பெரிசைக்கிள் மற்றும் பித் என எவ்விதமான வேறுபாடும் காணப்படுவதில்லை.
வாஸ்குலார் கற்றை:
- அதிகமான எண்ணிக்கையில் ஓரங்களில் சிறியனவாகவும் மையப் பகுதியில் பெரிதாகவும் காணப்படும்
- சிதறி காணப்படும்
- மூடியவை - கேம்பியம் இல்லை
- கற்றை உறை உள்ளது
இரண்டாம் நிலை வளர்ச்சி: பெரும்பாலும் இல்லை
பித்: இல்லை
மெடுல்லரி கதிர்கள்: இல்லை
இரு விதையிலை மற்றும் ஒரு விதையிலை தாவர இலைகளுக்கு இடையேயுள்ள வேறுபாடுகள்:
இரு விதையிலைத் தாவர இலை:
- மேல்கீழ் வேறுபாடு கொண்ட இலை காணப்படுகிறது.
- இலையிடைத்திசுவில் பாலிசேட் பாரன்கைமா மற்றும் ஸ்பாஞ்சி பாரன்கைமா என்ற வேறுபாடு காணப்படுகின்றது.
எ. கா: மா
ஒரு விதையிலைத் தாவர இலை:
- இரு பக்கமும் ஒத்த அமைப்புடைய இலை காணப்படுகிறது.
- இலையிடைத்திசுவில் பாலிசேட் பாரன்கைமா மற்றும் ஸ்பாஞ்சி பாரன்கைமா என்ற வேறுபாடு காணப்படுவதில்லை.
எ. கா: புல்