
PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoஅட்டைகள் இரண்டு வகையான இடப்பெயர்ச்சி அசைவுகளைச் செய்கின்றன.
1. வளைதல் அல்லது ஊர்தல் இயக்கம்:
அட்டை நிலத்தில் அல்லது தளத்தில் ஊர்ந்து செல்லும் போது இவ்வகையான அசைவுகளைச் செய்கின்றன. இரு ஒட்டுறிஞ்சிகள் மூலம் தளத்தில் ஒட்டிக்கொண்டுத் தசைகளைச் சுருங்கி விரியச் செய்வதன் மூலம் இத்தகைய இடப்பெயர்ச்சி இயக்கங்களை நடத்துகின்றன. அதாவது, நாம் கைவிரல்களால் சாண் அளப்பதுபோலத் தளத்தில் அட்டைகள் ஊர்ந்து செல்கின்றன.

அட்டையின் வளைதல் அல்லது ஊர்தல் இயக்கம்
2. நீந்துதல் இயக்கம்:
அட்டைகள் நீரில் நீந்தும் போது இத்தகைய இயக்கம் புரிகின்றன. அட்டைகள் நீரில் நன்றாக செயலாக்கத்துடன் நீந்தக்கூடியவை. தன் உடலை மேலும் கீழுமாக செங்குத்தாக அலை போல அசைத்து நீந்திச் செல்லும்.

அட்டைகள் நீரில் நீந்தும் இயக்கம்
Reference:
https://commons.wikimedia.org/wiki/File:Leech_looping_locomotion.jpg
https://upload.wikimedia.org/wikipedia/commons/e/ea/Leech_Underwater.jpg