PDF chapter test TRY NOW
உணவூட்டம்:
அட்டையின் உணவூட்ட முறை
அட்டைகள் விருந்தோம்பியின் உடலில், பின் ஒட்டுறிஞ்சி மூலம் உறுதியாக ஒட்டிக்கொள்கிறது. பின்னர் விருந்தோம்பியின் உடலில் 'Y' வடிவ காயத்தை ஏற்படுத்த தனது மூன்று ஆரத் தாடைகளை உபயோகப்படுத்துகின்றன. காயம் மூலம் வெளிப்படும் இரத்தத்தை உறிஞ்சத் தனது தசையால் ஆனத் தாடைகளை உபயோகப்படுத்துகிறது. வாய்குழியினுள் வந்த உணவின் மீது உமிழ்நீர் கொட்டப்படும்.
பின்னர், உணவு தீனிப்பை அறைகளிலும், குடல்வாலிலும் சேமிக்கப்படும். செரிமானத்துக்குத் தேவைப்படும் இரத்தம் தீனிப்பையில் இருந்து சுருக்குத்துளைகள் மூலம் அட்டையின் வயிற்றுக்குச் சொட்டு சொட்டாக அனுப்பப்படும்.
வயிற்றில் புரதச் சீரண நொதி உதவியுடன் உணவுச் செரிக்கப்படுகிறது. செரிக்கப்பட்ட இரத்தத்தை குடல் மெதுவாக உறிஞ்சிக்கொள்கிறது. அட்டைகள் உணவை மிக மெதுவாகவே செரிக்கின்றன. செரிக்கப்படாத உணவு மலக்குடலுக்கு செல்கிறது. அங்கே இருந்து மலத்துளை மூலம் உடலை விட்டு வெளியேற்றப்படுகிறது. இவ்வாறு அட்டைகள் உணவை சீரணிக்கின்றன.