
PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoமுயலின் உணவு மண்டலம் தாவர உண்ணி வகையான ஊட்டத்திற்கு ஏற்றார்போல் எவ்வாறு அமைந்துள்ளது?
முயலின் சீரண மண்டலம், உணவுப் பாதை மற்றும் சீரண சுரப்பிகளைக் கொண்டது.முயல்கள் தாவர உண்ணிகள் ஆகும். இவை விரும்பி உண்ணும் புற்கள், காய்கறிகள் மற்றும் தாவரங்கள் அதிகமான நார்சத்து நிறைந்தவை. எனவே அவற்றை வெட்டுவதற்கு ஏற்ற வகையில் முயலின் பற்கள் கூர்மையானதாகவும், வளைந்தும் காணப்படுகின்றன. பற்கள் முயலின் உணவு மண்டலத்தில் முக்கிய அங்கம் வகிக்கின்றன.
பற்கள் உணவுப் பொருட்களை வெட்டுவதற்கும், மெல்லுவதற்கும், அரைப்பதற்கும் உதவுகின்றன.இவை எலும்புகள் போல உறுதியான பண்புடையவை. முயலின் வெட்டும் பற்களுக்கும், முன் கடைவாய்ப் பற்களுக்கும் இடையேயான இடைவெளிப்பகுதி அல்லது பல் இடைவெளி என்றழைக்கப்படுகிறது. உணவை மேல்லும்போதும் அரைக்கும் போதும் அதைக் கையாள இந்த இடைவெளி தேவைப்படுகிறது.
நீண்ட குறுகிய அளவிலான விரிவடையக்கூடிய தசைகளைக் கொண்டு அமையப்பெற்ற இரைப்பை விலங்கின் உடலில் கழுத்து,மார்பறை, உதரவிதானம் ஆகிய உறுப்புகளைக் கடந்து வயிற்றறையினுள் அமைந்துள்ளது. இவை உணவுப் பாதையாக மட்டுமே பயன்படுகிறது.
இரைப்பையினுள் செரிமானம் நடைபெறுவது இல்லை. எனப்படும் குடல் வால் நீட்சி சுவருடையதாய் பெருங்குடலும் சிறுகுடலும் சங்கமிக்கும் இடத்தில் அமைந்துள்ளது. இங்கே காணப்படும் பாக்டீரியா, செரிக்க உதவுகிறது.