PDF chapter test TRY NOW
அட்டையில் காணப்படும் இடப்பெயர்ச்சி நிகழ்ச்சியின் படிநிலைகளை எழுதுக
அட்டையின் உடல் சற்று தட்டையாகவும், புழு போன்று நீளமாகவும் இருக்கும். மென்மையான உடல் கொண்ட அட்டைகள் என்னும் கண்டங்களாக பிரிக்கப்பட்ட உடல் அமைப்பைக் கொண்டவை ஆகும். இவை நீளும் போது போன்றும், சுருங்கும் போது போன்றும் மாறக்கூடியவை. இவ்வாறு நீண்டு சுருங்கும் போது இடப்பெயர்ச்சி நடக்கின்றது.
அட்டைகள் இரண்டு வகையான இடப்பெயர்ச்சி அசைவுகளைச் செய்கின்றன.
1. வளைதல் அல்லது ஊர்தல் இயக்கம்
அட்டை ஊர்ந்து செல்லும் போது இவ்வகையான அசைவுகளைச் செய்கின்றன. இரு ஒட்டுறிஞ்சிகள் மூலம் தளத்தில் ஒட்டிக்கொண்டுத் தசைகளைச் சுருங்கி விரியச் செய்வதன் மூலம் இத்தகைய இடப்பெயர்ச்சி இயக்கங்களை நடத்துகின்றன.
2. நீந்துதல் இயக்கம்
அட்டைகள் நீந்தும் போது இத்தகைய இயக்கம் புரிகின்றன. அட்டைகள் நீரில் நன்றாக செயலாக்கத்துடன் நீந்தக்கூடியவை. தன் உடலை மேலும் கீழுமாக செங்குத்தாக அலை போல அசைத்து நீந்திச் செல்லும்.