PDF chapter test TRY NOW
கீழே குறிப்பிட்டுள்ள படி, பருப்பொருட்களை மேலும் இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம்.

1. தூயப் பொருட்கள்
தூயப் பொருட்கள் என்பவை, ஒரே வகையான துகள்களினால் ஆனவை. அவைத் தனிமங்களாகவோ அல்லது சேர்மங்களாகவோ இருக்கலாம்.
தனிமம் என்பது ஒரே வகையான அணுக்களினால் ஆனது. சேர்மம் என்பது ஒரே வகையான மூலக்கூறினால் ஆனது.
தனிமத்தின் உதாரணங்கள்:
- தூயத் தங்கம்
- தாமிரம்
- வெள்ளி
- பிளாட்டினம்
- அலுமினியம்
சேர்மத்தின் உதாரணங்கள்:
- தண்ணீர் (H_2O)
- ஆப்பசோடா (NaHCO_3)
- சமையல் உப்பு (NaCl)
மூலக்கூறு என்பது, இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அணுக்களின் சேர்க்கையாகும்.
2. கலவை
கலவை என்பது, ஒன்றுக்கு மேற்பட்ட, ஒரே தன்மையுடைய துகள்களைக் கொண்ட, தூய்மையற்ற பொருளாகும்.
குறிப்பு: ஒரு பொருள் வேதியியல் சேர்க்கையினால் உருவானது என்றால் அது சேர்மம். அதுவே, ஒருபொருள் இயற்பியல் சேர்க்கையினால் உருவானது என்றால் அது கலவை.
சேர்மம் மற்றும் கலவையின் உருவாக்கம்:
பருப்பொருளின் அடிப்படையியல் கூறுகையில், தனிமங்களின் வேதியியல் சேர்க்கையினால் உருவானது தான் சேர்மம். துகளின் அடிப்படையில் கூறுகையில், ஒரே வகையான மூலக்கூறினால் உருவானது தான் சேர்மம்.
உதாரணம்: நீர், சமையல் உப்பு. நீரில் ஒரே வகையான H_2O மூலக்கூறினால் ஆனது மற்றும் சமையல் உப்பு ஒரே வகையான NaCl என்னும் மூலக்கூறினால் ஆனது.

நீர்

சமையல் உப்பு
கலவை என்பது இயற்பியல் சேர்க்கையினால் உருவானது,
- ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட தனிமங்களோ அல்லது சேர்மங்களோ ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் கலந்து ஒரு கலவையாக இருக்கலாம்.
உதாரணம்: 22 -காரட் தங்கம், இதில் தங்கத்துடன் தாமிரம் Cu, காட்மியம் Cd, துத்தநாகம் Zn போன்ற தனிமங்களால் ஆனது. இதனை ஒருபடித்தானக் கலவை என்பர். கலவைக்கு மற்றொரு உதாரணம் காற்று.

22-காரட் தங்கம்
- இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சேர்மங்களை ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் இல்லாமல் கலந்து இருக்கலாம். உதாரணம்: சோடா அல்லது குளிர் பானம். இதில் கார்பன் டை ஆக்ஸைட் CO_2, தண்ணீர் H_2O, இனிப்பூட்டி மற்றும் நிறமூட்டி போன்ற சேர்மங்கள் கலந்து இருக்கும். இதில் கார்பன் டை ஆக்ஸைட் CO_2 குறிப்பிட்ட விகிதத்தில் சமமாக பரவி இருக்காததனால் இதனை பலபடித்தானக் கலவை என்பர்.

குளிர் பானம்
24k தங்கம் என்பது 99.9\% தூயத் தங்கத்தைக் குறிக்கும். அதுவே 22k தங்கம் என்பது 91.6\% தங்கமும், மீதமுள்ள 8.4\% உலோகம் அல்லது உலோகக் கலவையான தாமிரம், வெள்ளி, துத்தநாகம் போன்றவற்றின் கலவை. இந்தக் கலவையில் உள்ள தங்கத்தின் அளவான 91.6 -ஐக் குறிக்கும் வகையில் இதனை 916 தங்கம் என்று அழைப்பர்.
தூயத் தங்கம் எளிதில் உடைந்துவிடும், அதனை நாம் ஆபரணமாக அணியவோ, பயன்படுத்தவோ முடியாது. அதனால் இதனை உறுதியாக்க, தங்கத்துடன் உலோகக் கலவையான தாமிரம், துத்தநாகம், வெள்ளி போன்றவற்றைச் சேர்க்கின்றனர். தங்கத்தின் தூய நிலையைக் குறிப்பதற்கு "காரட்" அல்லது "k" என்ற குறியீடு பயன்படுத்தப்படுகிறது.